Skip to content

எத்தும்-ஏமாற்றும்

சொல் பொருள்

எத்து(எற்று ) -எதைச் சொன்னாலும், ஏற்காமல் எற்றிவிட்டு (தள்ளி விட்டு)ப் போதல்.
ஏமாற்று – நம்புமாறு செய்து நம்பிக்கைக் கேடு ஆக்குதல்.

சொல் பொருள் விளக்கம்

“எத்தும் ஏமாற்றும் அவன் சொத்து” “எத்துவான் இல்லா விட்டால், ஏமாற்றுவான்; அது தான் அவன் தொழில்” “உன் எத்தும் ஏமாற்றும் இங்கே செல்லாது” என்பன வழங்கு மொழிகள். எற்றுதலால் மனத்துயர் மட்டுமே உண்டு; ஏமாற்றுதலால் பொருள் இழப்பும் அதன் வழியே மனத்துயரும் உண்டு. அதனால் “எத்தனோடு சேர்ந்தாலும் ஏமாத்துக் காரனோடு சேராதே” என்பர்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *