சொல் பொருள்

(பெ) 1. என் தந்தை

2. என் தலைவன், 

சொல் பொருள் விளக்கம்

என் தந்தை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

my father

 my master, my lord

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர் – குறு 40/2

என் தந்தையும் உன் தந்தையும் எந்த வழியில் உறவினர்?

ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 176/5

எனக்குப் பற்றுக்கோடாக இருக்கும் என் காதலனாகிய தலைவன் எங்கு உள்ளானோ?

இடுக்கண் இரியல் போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடை மேம் தோன்றல் – புறம் 388/6.7

பசித்துன்பம் பறந்தோடிப்போக தான் உடைய பொருள்களைக்
கொடுத்தான், எங்கள் தலைவன், கொடையால் மேம்பட்ட தோன்றல்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.