சொல் பொருள்
(பெ) 1. சூரியன், 2. வெயில், 3. வெம்மை, 4. கோடை
சொல் பொருள் விளக்கம்
1. சூரியன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sun, sunshine, heat, summer
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுடரும் என்றூழ் மா மலை மறையும் – குறு 215/1,2 ஒளிவிடும் ஞாயிறும் பெரிய மலையில் சென்று மறையும் என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் – அகம் 21/14 வெயில் நிலைபெற்ற புல்லிய இடத்தையுடைய ஊர்களில் உள் இல் என்றூழ் வியன் குளம் நிறைய வீசி – அகம் 42/9 உள்ளே நீர் அற்ற வெப்பமுடைய அகன்ற குளம் நிறையும்படி மிகுதியாகக் கொட்டி என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன் – நற் 43/2 கோடை நீடிய மலையின் உச்சிச் சரிவில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்