சொல் பொருள்
தெரியாமை;அறியாமை
சொல் பொருள் விளக்கம்
தெரியாமை என்பது ஒற்றின் நீக்கமாய் எய்யாமை ஆயிற்று. எய்யாமை – அறியாமை. இதன் உடன் பாடு தெரிதல் என்பது. இங்ஙனம் இருப்ப எய்த்தல் உடன் பாடு என்பர். குறவன் என்பதற்குப் பெண்பால் குறத்தி; குறத்தியின் திரிபு கொடிச்சி ; கொடிச்சி என்பதற்கு ஆண்பால் கொடியன் ஆகாது போல, எய்யாமை என்பதற்கு உடன்பாடு எய்தல் ஆகாது. கொடிச்சி என்பதற்கு ஆண்பால் குறவன் ஆதல் போல எய்யாமை என்பதற்கு உடன்பாடு தெரிதல் ஆகும். “எய்யாமையே அறியாமையே” என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் கீழ் அறிதற் பொருட்டாய் எய்தலென்றானும் எய்த்தலென்றானும் சான்றோர் செய்யுட்கண் வாராமையின் எய்யாமை என்பது எதிர்மறை அன்மை அறிக என்பர் சேனாவரையர். மறைச்சொல் என்பர் நச்சினார்க்கினியர். எய்த்தல் என்னுஞ்சொல் அறிதற் பொருளில் அக்காலத்திருப்பின் தொல்காப்பியர் அச்சொல்லையே கூறியிருப்பர். (மொழி நூல். (கார்த்) இலக்கணவியல். 143.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்