Skip to content
எருக்கு

எருக்கு என்பது மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு தாவரமாகும்

1. சொல் பொருள்

(வி) 1. வெட்டு, 2. அழி,  3. கொல்,  4. அடி, 2. (பெ) எருக்கம், பார்க்க – எருக்கம்

2. சொல் பொருள் விளக்கம்

எருக்கன் அல்லது எருக்கு (Calotropis) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு தாவரமாகும். இச் செடிகளில் பல வகைகள் உண்டு, என்றாலும் மிகுதியாகக் காணப்படுவது கத்தரிபூ நிற (நீல) எருக்கம் செடி. அதற்கடுத்து வெள்ளெருக்கு செடி ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

cut, hew, destroy, kill, strike, Calotropis gigantea, Crown flower, Madar, Calotropis procera, Milky Shrub Plant, Gigantic Swallow wort

எருக்கு
எருக்கு

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி
வேட்டு புழை அருப்பம் மாட்டி – முல் 24,25,26

காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில்,
நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி,
வேட்டுவரின் சிறு வாயில்களையுடைய அரண்களை அழித்து

நாடு கெட எருக்கி நன் கலம் தரூஉம் நின் – பதி 83/7

பகைவரின் நாடுகள் கெடும்படி அழித்து, திறையாக நல்ல அணிகலன்களைக் கொண்டுவருகின்ற உன்

களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் – அகம் 57/16

யானைகள் மடியக் கொன்ற கல்லென்ற ஒலியையுடைய போரில்

ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் – புறம் 237/10

மாறி மாறி வெம்மையாகத் தம் மார்பினில் அடித்துக்கொண்ட மகளிர்

குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி – அகம் 301/11

குவிந்த கொத்துக்களையுடைய எருக்கினது நெருங்கிய பூக்களால் ஆன தலைமாலை
வெள்ளெருக்கு
வெள்ளெருக்கு
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே - நற் 152/2

அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின்/பிணையல் அம் கண்ணி மிலைந்து மணி ஆர்ப்ப - கலி  139/8,9

குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி - அகம் 301/11

அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து - கலி 138/9

நிறைந்து ஆர் வளையினாய் அஃதால் எருக்கு
மறைந்து யானை பாய்ச்சிவிடல் - பழ:376/3,4

பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி/தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி - பெரும் 112,113

சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி/வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட - முல் 25,26

அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்கு - நற் 77/3

நாடு கெட எருக்கி நன் கலம் தரூஉம் நின் - பதி 83/7

அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல் - கலி 81/29

களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் - அகம் 57/16

ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் - புறம் 237/10
எருக்கன்
எருக்கன்
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால் - தேவா-அப்:53/2

எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி - தேவா-சுந்:316/3

யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின்
தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும் - தேவா-அப்:1005/2,3

தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த - தேவா-அப்:2224/1

கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னொடு கூவிளம் - தேவா-சம்:2750/1

கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர் - தேவா-சம்:438/1

சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் - தேவா-சம்:2396/2

துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி - தேவா-சம்:2653/1

சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும் - தேவா-சம்:3086/2

கோள் அரவு கொன்றை நகு வெண் தலை எருக்கு வனி கொக்கு இறகொடும் - தேவா-சம்:3593/1

தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின் - தேவா-சம்:3650/1

வன்னி கொன்றை எருக்கு அணிந்தான் மலை - தேவா-அப்:1838/1

வெள் எருக்கு அரவம் விரவும் சடை - தேவா-அப்:1856/1

விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை - தேவா-அப்:2823/2

ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை - தேவா-அப்:2978/1

ஒலிதரு தண் புனலோடு எருக்கும் மத மத்தமும் - தேவா-சம்:2914/3

தொடை நவில் கொன்றையொடு வன்னி துன் எருக்கும் அணிந்த - தேவா-சம்:3465/3

தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து - தேவா-சம்:3935/2

மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல் - தேவா-சம்:4068/1

தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று - தேவா-சுந்:13/3

இறந்தார் என்பும் எருக்கும் சூடி - தேவா-சுந்:960/1

வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க - தேவா-சம்:812/1

நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர - தேவா-சம்:837/3

வன்னி கொன்றை மத மத்தம் எருக்கொடு கூவிளம் - தேவா-சம்:1536/1

தொடை மலி இதழியும் துன் எருக்கொடு
புடை மலி சடைமுடி அடிகள் பொன் நகர் - தேவா-சம்:2979/1,2

மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும் - தேவா-சம்:3146/3

வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே ஏறு முன் செல தும்பை மிலைச்சியே - தேவா-சம்:4026/1

ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து ஓர் கிழி பிடித்து - திருக்கோ:74/3

எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள் ஏன - 6.வம்பறா:1 292/2

நீல எருக்கன்
நீல எருக்கன்
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன் - மணி:3/105

விண்ணகம் முழக்கின் ஏய்ப்ப வீதி-தொறும் எருக்கி எங்கும் - சிந்தா:3 609/3

எங்களுக்கு இறைவன் என்று ஆங்கு இடி முரசு எருக்கினானே - சிந்தா:5 1275/4

பூ என்று எருக்கின் இணர் சூடுப புன்மைகொண்டே - வளையா:28/2

கரந்தை மத்தமோடு எருக்கு அலர் கூவிளை கடுக்கை - பால-மிகை:9 48/1

கோவை மாலை எருக்கொடு கொன்றையின் - அயோ:7 21/2

நிறைந்து ஆர் வளையினாய் அஃதால் எருக்கு
மறைந்து யானை பாய்ச்சிவிடல் - பழ:376/3,4

நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை - நாலாயி:584/3

எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது எந்தை பிரானே - நாலாயி:1937/4

வால மா மதி மத்தம் எருக்கு அறுகு ஆறு பூளை தரித்த சடை திரு - திருப்:113/9

எருக்கு ஆர் தாளி தும்பை மரு சேர் போது கங்கையினை சூடு ஆதி நம்பர் புதல்வோனே - திருப்:711/5

எருக்கு மாலிகை குவளையின் நறு மலர் கடுக்கை மாலிகை பகிரதி சிறு பிறை - திருப்:838/11

செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்கு சூடி குமர வயலியல் - திருப்:979/15

கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி காகோதர குண்டல அத்தர் பினாகாயுதருடன் ஏய - திருப்:1159/6

பூளை எருக்கு மதி நாக பூணர் அளித்த சிறியோனே - திருப்:1294/3

பார மேரு வளைக்கும் பாணியார் சடையில் செம்பாதி சோமன் எருக்கும் புனைவார்தம் - திருப்:1032/5
எருக்கன்
எருக்கன்
இன் இசை முரசம் இயமரம் எருக்க
மன்னிய சும்மையொடு மகாஅர் துவன்றி - நரவாண:6/64,65

வென்றி முரசம் வீதி-தோறு எருக்கி
முன் யான் இவனை முருக்கலும் வேண்டினென் - உஞ்ஞை:37/198,199

திரு நகர் மூதூர் தெருவு-தோறு எருக்கி
மெய் காப்பு இளையர் அல்லது கைகூர்ந்து - உஞ்ஞை:38/101,102

இடி உறழ் முரசின் இரும் கண் எருக்கி
காட்டக மருங்கின் வீட்டிடம் அமைக என - உஞ்ஞை:58/78,79

படை நகர் வரைப்பகம் பறை கண் எருக்கி
பாடி காவலர் ஓடி ஆண்டு எறிந்து - மகத:17/214,215

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *