Skip to content

எற்பாடு

எற்பாடு

எற்பாடு என்பதன் பொருள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை; எல் – கதிரவன், படுதல்- சாயுதல்,

1. சொல் பொருள்

எல்படும் பொழுதை எற்பாடு, மாலை, பிற்பகல்,ஞாயிறு மறையும் நேரம், அதாவது சூரியன் மறையும் நேரம்.

எற்பாடு என்னும் சொல்லுக்கு ஞாயிற்றின் உதய காலம்எனப் பொருள் கொண்டாரும் உளர், காலை

சிறுபொழுது என்பது நாளின் கூறுபாடு. ஒரு நாளை, 1. வைகறை, 2. காலை, 3. நண்பகல், 4. எற்பாடு, 5. மாலை, 6. யாமம் என்பனவாக, ஆறு கூறுகளாக்கி, அவற்றைச் சிறுபொழுது என வழங்குவர்.

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

afternoon

sunrise, morning

One of the divisions of the day from two to six in the afternoon till sunset

3. சொல் பொருள் விளக்கம்

(1) எல்படும் பொழுதை எற்பாடு என்பது தமிழ் வழக்கு. இன்றும், தமிழ் வழக்கு அழியா மேல்கடற்கரையில் படுஞாயிற்றின் திசையைப் ‘படுஞாயிறு’ என வழங்குதல் உலகறிந்த செய்தி. (தொல்காப்பியர் பொருட்படலம்.18.)

  1. வைகறை (2-6), இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
  2. காலை (மணி 6-10), காலை 6 மணி முதல் முற்பகல் 10 மணி வரை
  3. நண்பகல் (10-2), முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
  4. எற்பாடு (2-6), பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை
  5. மாலை (6-10), மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
  6. யாமம் (10-2), இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை.

என்பவை ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்.

இதற்கு ஞாயிற்றின் உதய காலம் எனப் பொருள் கொண்டாரும் உளர் (முதல் சூத்திர விருத்தி) எனினும் கதிரவன் மறையும். (எல் – கதிரவன்; படுதல் – மறைதல்) மாலைக்காலம் எனக் கொள்ளுதலே சிறப்புடையது. நச்சினார்க் கினியர், சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், நாற்கவிராச நம்பி முதலோரும், தொல்காப்பியத்தின் பொருள் அதிகாரத்துக்குப் புத்துரை வகுத்த டாக்டர் சோம சுந்தர பாரதியாரும் மாலை என்றே பொருள் கொண்டனர். டாக்டர் பாரதியாரவர்களின் அகத்திணையியல் உரை நூலுள் 18 – 24 பக்கங்களில், இதுபற்றிய விளக்கம் காணலாம். ஐங்குறுநூற்றின் பழைய உரையாசிரியரும்இதை மாலை எனவே கொண்டார். (ஐங். 116. உரைக் குறிப்பு)

மாலைப் பொழுதுக்கு முன் பத்து நாழிகை நேரம்

சிறுபொழுது நாளின் கூறுபாடுகள்.

(1)வைகறை
(2)காலை
(3)நண்பகல்
(4)எற்பாடு (ஞாயிறு மறையும் நேரம்)
(5)மாலை
(6)யாமம்
சிறுபொழுது

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *