சொல் பொருள்
(பெ) 1. ஒரு நிலப்பகுதியின் வரம்பு, பகல்,
சொல் பொருள் விளக்கம்
1. ஒரு நிலப்பகுதியின் வரம்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
limit, border, boundary, daytime
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர்ப்பெயற்று எல்லை போகி – பெரும் 319 நீரின் பெயர்கொண்ட நீர்ப்பாயல்துறை என்னும் ஊரின் எல்லையிலே சென்று வட திசை எல்லை இமயம் ஆக – பதி 43/7 வடதிசையிலுள்ள இமயம் வடக்கு எல்லையாக எல்லை கழிய முல்லை மலர – குறு 387/1 பகற்பொழுது கழிய, முல்லை மலர, கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி – பொரு 117,118 கொல்லை நிலத்தில் உழுத கொழுப் போன்று, (எம்)பற்கள் பகலும் இரவும் இறைச்சியைத் தின்று (முனை)மழுங்கி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்