Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஒரு நிலப்பகுதியின் வரம்பு, பகல்,

சொல் பொருள் விளக்கம்

1. ஒரு நிலப்பகுதியின் வரம்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

limit, border, boundary, daytime

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நீர்ப்பெயற்று எல்லை போகி – பெரும் 319

நீரின் பெயர்கொண்ட நீர்ப்பாயல்துறை என்னும் ஊரின் எல்லையிலே சென்று

வட திசை எல்லை இமயம் ஆக – பதி 43/7

வடதிசையிலுள்ள இமயம் வடக்கு எல்லையாக

எல்லை கழிய முல்லை மலர – குறு 387/1

பகற்பொழுது கழிய, முல்லை மலர,

கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி – பொரு 117,118

கொல்லை நிலத்தில் உழுத கொழுப் போன்று, (எம்)பற்கள்
பகலும் இரவும் இறைச்சியைத் தின்று (முனை)மழுங்கி,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *