சொல் பொருள்
(வி) செல், போ
சொல் பொருள் விளக்கம்
செல், போ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
go
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மழவர் பெருமகன் மா வள் ஓரி கைவளம் இயைவது ஆயினும் ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே – நற் 52/9-11 வீரர்களின் தலைவனான, மிகுந்த வள்ளண்மையுள்ள ஓரியின் கையிற்கிடைக்கும் பெருஞ்செல்வம் கிடைக்கப்பெறினும் அது மிகவும் எளிமையானதாகும், உன்னுடன் கூடிப்பெறும் அப் பொருள், நீயே செல்வாய் மெல்லென் சேவடி மெலிய ஏக வல்லுநள்-கொல்லோ தானே – அகம் 89/18,19 மெத்தென்றிருக்கும் சிவந்த அடி வருந்தச் செல்வதற்கு வன்மையுடையள் ஆவாளோ?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்