சொல் பொருள்
(பெ) 1. உயரே ஏறுவதற்குப்படிகளூடன் கூடிய அமைப்பு, 2. எல்லை
சொல் பொருள் விளக்கம்
1. உயரே ஏறுவதற்குப்படிகளூடன் கூடிய அமைப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ladder, boundary
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெல் நூல்ஏணி பன் மாண் சுற்றினர் – மது 640 மெல்லிய நூலாற் செய்த ஏணியை (இடுப்பைச்சுற்றிப்)பல முறை சுற்றிய சுற்றினையுடையவராய் முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு – மது 199 முழங்குகின்ற கடலை எல்லையாகவுடைய அகன்ற இடத்தையுடைய உலகத்தாரொடு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்