சொல் பொருள்
(பெ) அன்னியன், வேறுநாட்டவன்
சொல் பொருள் விளக்கம்
அன்னியன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stranger, person of another country
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெய் போது அறியா தன் கூழையுள் ஏதிலான் கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின் செய்வது இல ஆகுமோ மற்று – கலி 107/14-16 “மலர்சூடி அறியாத இவளின் கூந்தலுக்குள், யாரோ ஒருவன் கையால் செய்த மாலையை முடிந்துகொண்டாள் என்று தாய் கேட்டால் நாம் ஏதாவது செய்யவேண்டாமோ?” பேதையோன் வினை வாங்க பீடு இலா அரசன் நாட்டு ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில் – கலி 27/7,8 அறிவற்ற அமைச்சன் ஆலோசனை கூற ஆளுகின்ற, தன் பெருமை குன்றிய அரசனின் நாட்டுக்குள் வேற்றுநாட்டவன் படைகள் கொஞ்சங்கொஞ்சமாய் ஆக்கிரமிப்பது போல் வந்து தங்கியது இளவேனில்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்