Skip to content
இளவேனில்

இளவேனில் என்பதன் பொருள்கோடைக்காலத்தின் முற்பகுதி (சித்திரை, வைகாசி மாதங்கள்)

1. சொல் பொருள்

(பெ) கோடைக்காலத்தின் முற்பகுதி (சித்திரை, வைகாசி மாதங்கள்), இளஞ்சூடுடன் இருக்கும் பருவம்; ஏப்ரல் மாதம்

2. சொல் பொருள் விளக்கம்

கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறு பருவங்களையுடையது தமிழர் ஆண்டுக்கணக்கு. தமிழ் மாதமான சித்திரை, வைகாசி. நான்கு பருவ காலங்களில், குளிர்காலத்திற்கும், கோடைகாலத்திற்கும் இடையில் வரும் காலமாகும். புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களிலும், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் இந்த பருவகாலம் குறிக்கப்படுகின்றது.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Early summer, Early hot period (mid April to mid June)

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் – கலி 34/7

(இறுத்தருதல் = வந்து நிலைபெறுதல்)

இன் இளவேனில் இது அன்றோ வையை நின் - பரி 6/77

நோதக வந்தன்றால் இளவேனில் மே தக - கலி 26/8

ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில்
நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள - கலி 27/8,9

மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண் - கலி 29/9

நயந்தார்க்கோ நல்லை-மன் இளவேனில் எம் போல - கலி 32/13

இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் - கலி 34/7

இன் இளவேனில் வந்தனன் இவண் என - சிலப்.புகார் 8/7

இளவேனில் வந்ததால் என் ஆம்-கொல் இன்று - சிலப்.புகார் 8/122

இன் இளவேனில் யாண்டு உளன் கொல் என்று - சிலப்.மது 14/117

இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும் - ஐந்50:31/3

இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற - மணி 24/30

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *