சொல் பொருள்
(வி) 1. ஒப்பாகு, 2. பொருந்து, 3. பரவிக்கிட, 4. ஏவிவிடு,
சொல் பொருள் விளக்கம்
1. ஒப்பாகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be similar to, be constituted, comprise, spread out, send forth
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்றி ஏய்க்கும் உடுக்கை – குறு 0/3 குன்றிமணியைப் போன்றிருக்கும் சிவந்த ஆடை ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் – நற் 252/8 மென்மை பொருந்தி அகன்ற அல்குலையும் கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு – புறம் 363/10 கள்ளிகள் பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த முதுகாட்டின் தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு – பரி 8/36 தலைவியரால் தூதாக ஏவிவிடப்பட்ட வண்டுக் கூட்டத்தின் இனிய இசை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்