ஏரி என்பது ஏர்த் தொழிலுக்காக ஏற்பட்ட நீர்நிலை
1. சொல் பொருள்
(பெ) 1. ஏர்த் தொழிலுக்காக ஏற்பட்ட நீர்நிலை ‘ஏரி’ என்று பெயர் பெற்றது, 2. மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக வரும் நீரைத் தேக்கி வைப்பது ஏரி ஆகும், 3. மனித முயற்சியின்றி இயற்கையாகவே சூழவுள்ள உயர் நிலத்தால் அடைக்கப்பட்ட நீர் நிலை.
2. சொல் பொருள் விளக்கம்
ஏர்த் தொழிலாகிய பயிர்த் தொழிலே முன்னாளில் ஏற்றமான தொழிலாகக் கருதப்பட்டது. ஏர்த் தொழிலுக்காக ஏற்பட்ட நீர்நிலை ‘ஏரி’ என்று பெயர் பெற்றது. (தமிழ் விருந்து. 87.)
#தண்ணீர்
மேலெழுந்தது வானத்திலிருந்து வருவது என்பதனால் அதனை அமிர்தம் என்றார் வள்ளுவர். நீர்நிலைகளுக்கு தமிழர்கள் வழங்கிவந்த பெயர்கள் பல. சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளிப்பதற்குப் பயன்படும் நீர்நிலை குளம் என்பதாகவும், உண்பதற்கு பயன்படும் நீர்நிலை ஊருணி எனவும், ஏர் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை ஏரி எனவும், வேறு வகையான மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் ஏந்தல் என்றும், கண்ணாறுகளை உடையது கண்மாய் என்றும் தமிழர் பெயரிட்டு அழைத்தனர்.
(தொ. பரமசிவன்)

மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Lake
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
வரி அணி சுடர் வான் பொய்கை
இரு காமத்து இணை ஏரி – பட் 39,40
பல நிறங்களைக் கொண்டு ஒளிரும் அழகிய பொய்கைகளையும்,
(இம்மையிலும் மறுமையிலும் உண்டாகிய) இரண்டுவிதக் காம இன்பம் (கொடுக்கும்) இணைந்த ஏரிகளையும்;

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்