சொல் பொருள்
ஏறு – ஏறுதல் அல்லது எக்காரம் அமைதல்.
மாறு – மாறுதல் அல்லது தாழ்ச்சி அமைதல்.
சொல் பொருள் விளக்கம்
ஏறுக்குமாறு என்றால் முரண்படுதலாம். ஏறும் போது மாறுதல் – இறங்குதல்; இறங்கும் போது மாறுதல் – ஏறுதல்; இவை ஏறுக்குமாறு எனப்படும். “ஏறுமாறாக நடப்பாளேயாமாகில் கூறாமல் சந்நியாசம் கொள்.” என்பது ஒளவையார் தனிப்பாடல்.
ஏறுக்கு மாறு எவருக்கும் பயனாகாதது. மெய்யாக, இணை வாழ்வுக்கு ஆகுமா? ஏறுமாறு – ஏற்ற மாற்றமுமாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்