Skip to content

சொல் பொருள்

ஏலம் – மணம், இயலும் விலை

சொல் பொருள் விளக்கம்

ஏலம், மணப் பொருள். அப்பொருளைக் குறியாமல் குழந்தையின் வாயை’ “ஏலவாய்” என்பது மணக்கும் வாய் என்னும் பொருளதாம். கரும்பு இனிப்பு, வேம்பு கசப்பு எனப் பொருள் தருவது, போல ஏலம் மணப் பொருள் தருகின்றதாம். இனி ‘ஏலம் போடுதல் என்பது வேறு. இயலும் என்னும் சொல் ஏலும் என்றாகி ஏலமாகியது. இயலுமட்டும் என்பது ஏலுமட்டும் என்றும், இயலாது என்பது ஏலாது என்றும் வருதல் அறிக. இயலும் விலைக்குக் கேட்டல் ‘ஏலம்’ எனப்படுகின்றதாம். ஏலத்தை எவ்வளவு குறைவாகவும் கேட்கலாம்; கூட்டியும் கேட்கலாம். பொருள் மதிப்பீடு கேட்பவர் இயலுமானதைப் பொறுத்ததே; போட்டி நிலையைப் பொறுத்ததே.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *