Skip to content

ஏனென்று கேட்டல்

சொல் பொருள்

ஏனென்று கேட்டல் – தடுத்தல், தட்டிக் கேட்டல்

சொல் பொருள் விளக்கம்

‘ஏன் என்பது வினா, எனினும் அவ்வினாத்தன்மையைக் கடந்து தடுத்துக் கேட்டல் என்னும் பொருளிலும் வளர்ந்துள்ளது. “ஏன் என்பதற்கு ஆள் இல்லாமல் போனதால் எதுவும் செய்யலாம் எனத் துணிந்து விட்டான்” “ஊறில் அவன் இல்லை; ஏனென்று கேட்க ஆளில்லை; எது எதுவோ தலைகால் தெரியாமல் ஆடுகின்றது” என்பன போன்றவற்றில் ஏன் என்பது தடுத்தல் பொருளில் வருவது தெளிவாகும். தட்டிக்கேட்டல் என்பது தடுத்து நிறுத்திக் கேட்டல் என்பதாம்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *