Skip to content

ஒட்டப்போடல்

சொல் பொருள்

ஒட்டப்போடல் – பட்டுணி போடல்

சொல் பொருள் விளக்கம்

ஒட்ட-வயிறு ஒட்ட. வயிற்றுக்குச் சோறு தீனி இல்லாக்கால் குடர் ஒட்டி, வயிறும் ஒட்டிப் போம். ஒருவேளை – ஒரு நாள் – பட்டுணி என்பதின்றிப் பலநாள் பட்டுணி என்றால் முதுகு எலும்பொடு வயிற்றுத் தோலும் ஒட்டிப் போனது போல் குடை பட்டுப் போகும். அதனை ஒட்டப் போடுதல் என்பர். உன்னை ஒட்டப் போட்டால்தான் ஒழுங்குக்கு வருவாய்; வேளை தவறாமல் வயிறு முட்டப் போட்டால் சரிப்படமாட்டாய்” எனத் திட்டுவர். பட்டு என்பது இடை இடை விட்டு, உணி – உண்பது. இடை இடைவிட்டு – பல வேளைகள், சில நாள்கள் இடைவிட்டு உண்பதே பட்டுணியாம்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *