Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் என்னும் ஐந்துவகையான் கூந்தல் முடிப்பு

2. ஐந்து கால் எடுத்துப் பின்னப்பட்டிருக்கும் பெண்-கூந்தல் ஒப்பனை

சொல் பொருள் விளக்கம்

கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் என்னும் ஐந்துவகையான் கூந்தல் முடிப்பு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Woman’s hair, from its being dressed in five modes

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால்
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து – மலை 30,31

மணமாலை (இன்னும்)மணக்கும்(புதுமணம் மாறாத), (மொய்க்கும்)வண்டுகளும் மணம்வீசும் கூந்தலினையுடைய 30
இளம்பெண்ணின் அழகுநிறைந்த, மெல்லிதாக அசையும் அழகிய மார்பகத்தே

தேம் கமழ் ஐம்பால் பற்றி – நற் 100/4

இனிதாய்க் கமழும் என் கூந்தலைப் பற்றி இழுத்து,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *