Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மென்மையானது, மெல்லியது, 2. நுண்மையானது, 3. வியப்பிற்குரியது, 4. அழகினையுடையது, 5. பதமானது

சொல் பொருள் விளக்கம்

மென்மையானது, மெல்லியது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

that which is soft, that which is fine, minute, subtle, that which is wonderful, that which is beautiful, that which is in proper condition

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஐது அகல் அல்குல் மகளிர் – புறம் 389/16

மெல்லிதாய் அகன்ற அல்குலையுடைய நின் மகளிர்

அம் மா மேனி ஐது அமை நுசுப்பின் – அகம் 75/18

அழகிய மாமை நிறத்தையுடைய மேனியினையும் நுண்ணிதாய் அமைந்த இடையினையும்

அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் – நற் 264/3

அழகு விளங்கிய கலாபத்தை வியப்புடையதாக விரித்து ஆடுகின்ற

நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை – அகம் 119/11

நெய்தல் பூப்போலும் உருவினையுடைய அழகிதாய் விளங்கும் அகன்ற இலையினையும்

மனையோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்குறுத்த
திரிமரக் குரல் இசை கடுப்ப – அகம் 224/10-12

மனைவி
பதமாகக் காய்ந்த அரிசியைப் பெய்து சுற்றுதல் செய்த
திரிகையின் குரலொலியைப் போல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *