சொல் பொருள்
ஒன்று – ஒரு பெரும் பிரிவு
உள்ளே ஒன்று – பெரும் பிரிவினுள் ஒருசிறு பிரிவு
சொல் பொருள் விளக்கம்
ஓரினத்திற்குள்ளோ, ஒரு குடிவழியினுள்ளோ பகை, பிளவு, உரசல் முரசல், ஏற்பட்டால், “ஒண்ணுக்குள்ளே ஒண்ணு; பொறுத்துப் போக வேண்டாமா?” என்பர். ‘அவன் யார்? நீயார்?’ என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா?” என்றும் கூறுவர். இனத்துள் அல்லது குடும்பத்துள் பிளவு கூடாது என்னும் பெருநோக்கில் எழுந்தது இது.
நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் பகைத்து நிற்கக் கண்ட பண்டைப் புலவர் “நீயும் சோழன் அவனும் சோழன்; இப்படியா பகைத்து நிற்பது?” என்று கேட்கவில்லையா? அக் கேள்விக்குள்ளே இருப்பது ‘ஒன்றுக்குள்ளே ஒன்று’ என்பதே.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்