Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. வார், கசியச்செய், 2. நடப்பி,

2. (பெ) 1. நேரிய பகுதி, 2. (மழை) பெய்தல், 3. வரிசையாகச் செல்தல், 4. ஒழுக்கம்,

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : பொருள்பிணி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

straight part, pouring (as of rain), moving in a row, discipline

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை – அகம் 247/1

கழுவாத முத்து ஆகிய கண்ணீர் ஒழுகவிடப்பெற்ற அழகிய முலையினையுடைய

முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை – பதி 74/24

உணரத் தக்கவற்றை முழுதும் உணர்ந்து, பிறரையும் நன்னெறியில் ஒழுகச்செய்யும் நரை கொண்ட முதுமையான
புரோகிதனை

வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள் – அகம் 213/16

மூங்கிலின் நேரிய பகுதியை ஒத்த வளைந்த முன்கையுடன் கூடிய பருத்த தோளின்

மழை ஒழுக்கு அறாஅ பிழையா விளையுள் – மது 507

மழை பெய்தல் இடையறாமையாலே தவறாத விளைவினையுடைய

கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணி
எல்லை கழிந்தனெம் – நற் 159/4,5

சங்குகளைக் கொத்துக்கொத்தாக நிரைத்தாற்போன்ற குருகினங்கள் வரிசையாகச் செல்வதை எண்ணி
பகற்போதைக் கழித்தோம்

சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப – புறம் 173/7

மிகச் சிறிய எறும்பினது சிலவாகிய சாரை சாரையாகச் செல்லும் வரிசை ஒழுங்கை ஒப்ப

விழு கடிப்ப அறைந்த முழு குரல் முரசம்
ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப – புறம் 366/1-3

பெரிய குறுந்தடியால் அடிக்கப்பட்ட பெரு முழக்கத்தையுடைய முரசம்
மற ஒழுக்கமுடைய வீரரிடத்தே சென்று அரசாணை என்ற ஒரு குறிப்பே தோன்ற
பாம்பை எறியும் இடி முழங்குவது போல முழங்க
– ஔ.சு.து.உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *