Skip to content

சொல் பொருள்

(பெ) 1. உயர்ச்சி,  2. எழுச்சி, 3. மலை,

சொல் பொருள் விளக்கம்

உயர்ச்சி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

height, elevation, rising, mountain,

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின் – நற் 87/1,2

நம் ஊரிலுள்ள மா மரத்தில் இருக்கும் முள் போன்ற பற்களைக் கொண்ட வௌவால்,
உயர்ந்த அழகிய கிளையில் தொங்கியவாறு துயிலும் பொழுதில்

ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர் – நற் 395/6

உயர்ந்து எழும் அலைகளுக்குள் பாய்ந்து விளையாடும் மகளிர்

ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ – அகம் 228/10

மலையின் மேலுள்ள வேங்கை மரத்தின் ஒளி பொருந்திய மலர்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.