சொல் பொருள்
ஓங்கு – உயரத்தில் மிக்கிருத்தல்.
தாங்கு – கனத்தில் மிக்கிருத்தல்.
சொல் பொருள் விளக்கம்
‘ஓங்கு தாங்கான மரம்’ என்றும் ‘ஓங்கு தாங்கான ஆள்’ என்றும் வழங்குவது உண்டு. ‘ஓங்குதல்’ மட்டுமானால், ‘நெட்டப்பனை’ ‘கோக்காலி’, ‘கொக்கு’ என்று பழிக்கப்படும். தாங்குதல் மட்டுமானால் செக்குரல், குந்தானி, ‘புளிமூட்டை’ ‘கடகப் பெட்டி’ இன்னவாறு பழிக்கப்படும். நல்ல உயரமும், அதற்கேற்ற கட்டான உடற்கனமும் வாய்த்திருப்பின் பாராட்டப்படும். அதுவே ‘ஓங்கு தாங்கு’ என்பதாம். சங்கநாள் பாரி ஓங்கு தாங்காக இருந்ததால் ‘பாரி’ என்னும் பெயர் பெற்றான். அவன் இயற்பெயர் மறையப் புகழ்ப் பெயரே நின்றதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்