Skip to content

சொல் பொருள்

ஓசை – பொருளற்றது
ஒலி – பொருளுற்றது.

சொல் பொருள் விளக்கம்

“ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே” என்பது தேவாரம். நீரின் சலசலப்பு; காற்றின் உராய்வு; இடியின் வெடி; முகில் முழக்கு இவையெல்லாம் ஓசையாம்; உயிரிகள் அல்லா இவற்றின் ஓசையில் உணர்வு சிறிதும் இன்றாம்; உணர்வோடு கூடா ஒன்றில் பொருளாய்வது பொருந்துமோ.

உயிரிகளின் இன்பு, துன்பு, அச்சம், வெகுளி, அரவணைப்பு அரற்று ஆய உணர்வு வெளிப்பாடாகவும், மொழிவல்லார் குறிப்பு, வெளிப்படை எனக் கொண்டு உணர்த்தியும், உணர்ந்தும் வரும் பொருள் வெளிப்பாடாகவும் கிளர்வென வெல்லாம் ஒலியாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *