Skip to content
ஓடை

ஓடை என்பது நீரோடை, யானையின் நெற்றிப்பட்டம்

1. சொல் பொருள்

(பெ) 1. பள்ளம், 2. யானையின் நெற்றிப்பட்டம்(பள்ளம்), 3. நீரோடை, சிறிய நீர்வழி, 4. ஒடுங்கிய பாதை, ஒற்றையடிப்பாதை நடைபாதை

2. சொல் பொருள் விளக்கம்

நிலத்தை ஊடறுத்துக் கொண்டு ஓடும் நீரால் அமைந்த ஓடுகால் அல்லது பள்ளம். நீர் ஓட்டத்தால் அமைந்தது.

நீரோடை, யானை நெற்றி யோடை என்பவற்றையும் நெடிது ஓடுகின்ற ஒரு கொடியையும் குறித்தல் யாப்பருங்கலவிருத்திச் செய்தி. “ஓடையே ஓடையே ஓடையே ஓடை” என்னும் பாடல் அது. பள்ளம் என்னும் பொருளில், யானையின் நெற்றிப் பள்ளத்தை ‘ஓடை’ என்பதாயிற்று

ஒடுங்கிய பாதையாகிய ஒற்றையடிப்பாதை நடைபாதை என்பவற்றைக் குறித்தல் குமரி மாவட்ட வழக்கு. ஆறு, வழியாதலை நினைக.

ஓடை
ஓடை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Frontlet for elephants, stream, narrow path

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

ஒன்னார் யானை ஓடை பொன் கொண்டு – புறம் 126/1

பகைவருடைய யானையினது பட்டத்திலுள்ள பொன்னைக் கொண்டு

நீரோடை
நீரோடை

பொன் செய் ஓடை புனை நலம் கடுப்ப – நற் 296/3

ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல் – பதி 34/6

வாய்மொழி ஓடை மலர்ந்த – பரி 3/12

ஒண் சுடர் ஓடை களிறு ஏய்க்கும் நின் குன்றத்து – பரி 18/27

ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி – பரி 21/1

மை படு சென்னி மழ களிற்று ஓடை போல் – கலி 86/1

ஒண் நுதல் யாத்த திலக அவிர் ஓடை/தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு – கலி 97/11,12

ஓடை ஒண் சுடர் ஒப்ப தோன்றும் – அகம் 100/10

ஓடை குன்றத்து கோடையொடு துயல்வர – அகம் 111/6

அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை/வினை நவில் யானை விறல் போர் பாண்டியன் – அகம் 201/2,3

ஓடை யானை உயர் மிசை எடுத்த – அகம் 358/13

ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் – அகம் 387/18

பொன் ஓடை புகர் அணி நுதல் – புறம் 3/7

ஒளி திகழ் ஓடை பொலிய மருங்கின் – புறம் 161/18

பொலம் புனை ஓடை அண்ணல் யானை – புறம் 287/5

பொன் செய் ஓடை பெரும் பரிசிலனே – புறம் 326/15

ஓடை நுதல ஒல்குதல் அறியா – புறம் 369/25

விழு சூழிய விளங்கு ஓடைய/கடும் சினத்த கமழ் கடாஅத்து – மது 43,44

வாடா மாலை ஓடையொடு துயல்வர – திரு 79

ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை – நெடு 169

மார்பு மலி பைம் தார் ஓடையொடு விளங்கும் – பதி 11/17

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *