சொல் பொருள்
ஓட்டை – துளை; துளை என்பது வெடிப்பு கீறல் முதலியவற்றையும் தழுவும்.
உடைவு – உடைந்து போனது. துண்டானது, இரு கூறானது
சொல் பொருள் விளக்கம்
ஓட்டை விழுந்த கலங்களையும் ஒரு வகையாகப் பயன்படுத்திக் கொள்வர். ஆனால் உடைந்து போனதைப் பயன்படுத்துவார் இலர். அவ்வுடைவும் கைபிடி. கழுத்துப் பகுதியில் இருப்பின் பிறிதொன்று வாங்கிக் கொள்ள இயலாதார் பயன்கொள்வது உண்டு. ஓட்டை உடைவு பழுதுபார்க்கவும் ஈயம் பூசவும் வருவார் உண்டு. அவர்கள் ‘ஓட்டை உடைசலை’ நீட்டி முழக்கிக் கேட்பது நாடறிந்தது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்