சொல் பொருள்
ஓவாய் – பல் போனவாய்.
ஒழுவாய் – நீர் வழியும் ஓட்டைவாய்.
சொல் பொருள் விளக்கம்
ஓ-ஓவுதல்; ஓவுதலாவது, ஒழிதல், நீங்குதல் என்னும் பொருட்டது. பல் ஒழிந்து இடைவெளிபட்டுப் போனவாய் ஒவாய் எனப்படும். ஒழுவாய்-ஒழுகும் வாய், ஒழுவாய் என நின்றது. பல் போய் பின்னர்த் தடையின்றி நீர் ஒழுகுதல் உளதாகலின் ஒழுவாய் எனப்பட்டது. ‘ஓவாயன் ஒழுவாயன்’ என்பவை நகையாண்டிப் பெயர்கள். இப்பெயர்களாக நிலைத்தாரும் உளர். “போவாய் பொழுவாய்” காண்க.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்