சொல் பொருள்
(பெ) 1. காடு, 2. பாலை நிலம், 3. மலைச்சாரல்,
சொல் பொருள் விளக்கம்
காடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
jungle, desert tract, mountain slop
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் – பெரும் 116 கடுமையான கானவர் காட்டில் (கூட்டாஞ்சோற்றைக்)கூடியுண்ணும் வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ – நற் 164/8 வெம்மையான பாலைவழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க, கோடு காய் கடற்ற காடு இறந்தோரே – அகம் 395/15 உச்சி வெம்பிப்போன மலைச்சரிவிலுள்ள காடுகளைக் கடந்து சென்றவர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்