சொல் பொருள்
(பெ) 1. உரைகல், 2. முறைமை
கட்டளை என்பது அளவிடப்பட்டது என்னும் பொருளது
சொல் பொருள் விளக்கம்
ஆணை என்னும் பொருளில் கட்டளை வருதல் பொது வழக்கு. கட்டளைக்கல் என்பது இலக்கிய வழக்கு. மக்கள் வழக்கில் கட்டளை என்பது வரம்பு செய்யப்பட்ட அளவு, பரப்பு என்னும் பொருளில் செங்கல் கட்டளை, கட்டளைக்கல் எனக் கட்டளை ஆட்சி உள்ளது. கட்டளை என்பது அளவிடப்பட்டது என்னும் பொருளது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
touchstone, way, method, manner
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொன் காண் கட்டளை கடுப்ப – பெரும் 220 பொன்னை(உரைத்து)க் காணும் கட்டளைக்கல்லை ஒப்ப வேனில் பள்ளி தென் வளி தரூஉம் நேர் வாய் கட்டளை திரியாது – நெடு 61,62 இளவேனில் காலத்தில் (துயிலும்)படுக்கை அறைக்குத் தென்றல் காற்றைத் தரும் நேருக்கு நேராக அமைந்த சாளரங்கள் திறக்கப்படாமல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்