சொல் பொருள்
கட்டி – கட்டபட்ட ஒன்று கட்டி.
முட்டி – கட்டி உடைந்து உண்டாய துண்டு முட்டி.
சொல் பொருள் விளக்கம்
கருப்புக்கட்டி, வெல்லக்கட்டி, செங்கற்கட்டி, தங்கக்கட்டி இவற்றில் கட்டியின் பொருளை அறிந்து கொள்க. இனி மண்ணாங்கட்டி என்பது ஒரு பொருளும், வசையுமாய் அமைந்ததாம்.
செங்கற்கட்டி உடைந்ததைச் செங்கல்முட்டி என்பது வழக்கு. உழவடையில் ‘கட்டி முட்டி’, தட்டுதல் ஒரு பகுதியாம். கூழ், களி கிண்டும் போது ‘கட்டிபடாமல்’ இருக்கக் கவலைப்படுவர். அதில் ‘பெரிய கட்டி’ ‘சிறிய கட்டி’ இருந்தால், “என்ன கட்டியும் முட்டியுமாக இருக்கிறது” என்பது வழக்கு. இது ‘கட்டாணி முட்டாணி’ எனவும் வழங்கப்படும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்