சொல் பொருள்
(பெ) 1. குந்தாலி, 2. மழு
சொல் பொருள் விளக்கம்
குந்தாலி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a kind of pick-axe
battle axe
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொன் செய் கணிச்சி திண் பிணி உடைத்து சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல் – பதி 22/12,13 இரும்பால் செய்யப்பட்ட குந்தாலியால், திண்மையான பிணிப்புக்கொண்ட கட்டாந்தரையைப் பிளந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறிதளவு ஊறிய நீரைக் கொண்ட பள்ளத்தில் மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும் – புறம் 56/2 விலக்குதற்கரிய மழுவாகிய படைக்கலத்தை உடைய நீல மணி போலும் மிடற்றையுடையோனும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்