சொல் பொருள்
(பெ) ஒருசங்ககாலச் சிற்றரசன்,
சொல் பொருள் விளக்கம்
ஒருசங்ககாலச் சிற்றரசன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a chieftain of sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சோழன் பெரும்பூண் சென்னியை எதிர்த்துப் போரிட்டவர் எழுவர் இந்த எழுவர் கூட்டணியில் கணையன் என்பவனும் ஒருவன். இக்கூட்டணி போரில் சோழர் படைத்தலைவன் பழையனைக் கொன்றது. பின்னர் பெரும்பூண் சென்னியே தலைமையேற்று போரிட்டபோது எழுவர் கூட்டணியில் அறுவர் தப்பி ஓடிவிட்டனர். கணையன் மட்டும் அகப்பட்டுக்கொண்டான். அவன் சோழநாட்டுக் கழுமலச்சிறையில் அடைக்கப்பட்டான். சோழனை எதிர்த்த எழுவரும் சேரன் படைத்தலைவர்கள், கணையன் சேரன் தலைமைப் படைத்தலைவன் என்பார் நாட்டார் தம் உரையில். நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் பருந்து பட பண்ணி பழையன் பட்டு என கண்டது நோனான் ஆகி திண் தேர் கணையன் அகப்பட கழுமலம் தந்த பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி அழும்பில் அன்ன அறாஅ யாணர் – அகம் 44/7-15 நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும், (பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும், பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில், பருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக, அதனைக் கண்டு பொறுக்காதவனாகி, திண்ணிய தேரையுடைய கணையன் என்பானை அகப்படுத்தி, கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய பிணைப்புள்ள அழகிய கண்ணியையும், மிகுந்த அணிகலன்களையும் அணிந்த சென்னியின் அழும்பில் என்ற ஊரை ஒத்த, குறையாத புதுவருவாயையுடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்