Skip to content
கண்டல்

கண்டல் என்பதுசிறுகண்டல்,வெண்கண்டல்மரம்

1. சொல் பொருள்

(பெ) சதுப்பு நிலங்களில் காணப்படும் ஒருவகை மரம்

2. சொல் பொருள் விளக்கம்

சதுப்பு நிலங்களில் காணப்படும் ஒருவகை மரம். அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்கள் (mangrove) எனப்படுபவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் சேறு கலந்த சதுப்பு நிலங்களில் அலையாத்தி காடுகள் வளர்கின்றன. உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் சதுப்பளக் காடுகள் , சதுப்புநிலக் காடுகள், அலையாத்திக்காடுகள்(Mangrove forest) எனப்படும்.

இக்காடுகளில் பேய்க்கண்டல், சொரிபுன்னை, கழுதை முன்னி, நரிக்கண்டல், வெண்கண்டல், பன்னுக்குத்தி, கருங்கண்டல், சிறுகண்டல், தில்லை, திப்பரந்தை, நெட்டை, சுரபுண்ணை, குட்டைசுரபுண்ணை, மலட்டுசுரபுண்ணை, சோமுந்திரி, சவுந்தரி, கின்ன மரம், காகண்டல், கண்ணா, வெற்றிலை கண்ணா, முள்ளி, கடல் மாங்காய், கடல்மங்கை, பிச்சு வெளாத்தி, மின்னி, வில்பாதிரி, நச்சு மாங்காய், நரிக்கீரி, ஆட்டுமுள்ளி பண்டிக்குச்சி,திப்பாரத்தை, உமிரி, உப்பாத்தா, முண்டகம் ஆகிய மரங்கள் உள்ளன.

கடற்கரை ஓரங்களில், கடலலையினால்  ஏற்படக்கூடிய மண்ணரிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அலை அதிகமான கடல்நீரானது மரங்களினிடையே சென்று, அலைகள் குறையப்பெற்று, மிக மெதுவாக நகரும் ஆறுகள் போன்ற நீர்நிலையாக இருப்பதனால் இவை அலையாத்தி என அழைக்கப்படும்

சதுப்புநிலக் காடுகள்
சதுப்புநிலக் காடுகள்

கண்டல் தாவரங்கள் (mangrove) அல்லது அலையாத்தித் தாவரங்கள் எனப்படுபவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும் இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக் காடு (Mangrove forest) எனப்படும்.

நிலமும் கடலும் சேரும் பகுதிகளில், சில இடங்கள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும், சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அலையாத்தித் தாவரங்கள் இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இவை வளரும் இடங்கள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

அலையாத்திக் காடுகள்
அலையாத்திக் காடுகள்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Mangrove, Rhizophora mucronata, Excoecaria agallocha, Lumnitzera racemosa, Sonneratia caseolaris, Xylocrpus granatum

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

என் குறை
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர்
கொய் குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணி புறம் தைவரும்
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே – நற் 54/7-11

எனது குறையை
இங்கே இருப்பது போல அவர் உணரும்படி சொல்வாயாக! தழையாடை அணிவோர்
கொய்யக்கூடிய இலைகள் தழைத்த இளம் ஞாழல்
தெளிந்த அலைகளின் நீலநிற மேற்புறத்தைத் தடவிக்கொடுக்கும்,
கண்டல் மரவேலிகளையுடைய உம்முடைய கடல்துறைத் தலைவருக்கு

கானல் கண்டல் கழன்று உகு பைம் காய்
நீல் நிற இரும் கழி உட்பட வீழ்ந்து என – நற் 345/1,2

கடற்கரைச் சோலையில் உள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று விழுகின்ற பசுமையான காய்கள்
கரிய நிறமுள்ள பெரிய கழியினுள் விழுந்ததாக

கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே - நற் 54/11

கண்டல் வேலிய ஊர் அவன் - நற் 74/10

புலவு திரை உதைத்த கொடும் தாள் கண்டல்/சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் - நற் 123/9,10

கண்டல் வேலி காமர் சிறுகுடி - நற் 191/5

கண்டல் வேலி கழி சூழ் படப்பை - நற் 207/1

கானல் கண்டல் கழன்று உகு பைம் காய் - நற் 345/1

கண்டல் வேலி கழி சூழ் படப்பை - நற் 363/1

கண்டல் வேலி கழி நல் ஊரே - நற் 372/13

கண்டல் வேர் அளை செலீஇயர் அண்டர் - குறு 117/3

அழுவம் நின்ற அலர் வேய் கண்டல்/கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம் - குறு 340/4,5

கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும் - பரி 10/101

கண்டல் கானல் குருகு_இனம் ஒலிப்ப - அகம் 260/3

கண்டல் திரை அலைக்கும் கானல் அம் தண் சேர்ப்ப - நாலடி:20 4/3

கண்டல் அம் தண் தில்லை கலந்து கழி சூழ்ந்த - திணை150:61/3

கண்டல் அவிர் பூங்கதுப்பினாய் இன்னாதே - சிறுபஞ்:12/3

கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் - தேவா-சம்:33/3

கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலி காழி - தேவா-சம்:1994/2

கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப - தேவா-சம்:2461/3

இலை இலங்கும் மலர் கைதை கண்டல் வெறி விரவலால் - தேவா-சம்:2698/3

கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே - தேவா-சம்:2728/4

கானிடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர் - தேவா-சம்:3927/2

கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ - தேவா-அப்:53/4

கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை - தேவா-அப்:1891/3

களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் - தேவா-அப்:2204/3

கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் - தேவா-அப்:2209/3

கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே - தேவா-அப்:2313/4

கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை கடற்கரை - தேவா-சுந்:113/3

கழிப்பால் கண்டல் தங்க சுழி ஏந்து மா மறுகின் - தேவா-சுந்:233/3

கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே - தேவா-சுந்:597/4

கண்டல்கள் மிண்டிய கானல் காழி கவுணியன் ஞானசம்பந்தன் சொன்ன - தேவா-சம்:86/3

கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி - தேவா-சம்:323/3

கண்டல் உற்று ஏர் நின்ற சேரி சென்றான் ஓர் கழலவனே - திருக்கோ:290/4

கண்டல் முன் துறை கரி சொரிவன கலம் கடல்-பால் - 4.மும்மை:5 8/4

கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை - நாலாயி:977/2

கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன் கலியன் வாய் ஒலிசெய்த பனுவல் - நாலாயி:1827/3

கரை எலாம் புன்னை கானமும் கண்டல் அடவியும் கைதை அம் காடும் - வில்லி:6 18/3

களி நறும் சுரும்பு இமிர் கண்டல் வேலி சூழ் - வில்லி:11 102/2

எனை பொருள் உண்மை மாத்திரை கண்டல்
திரிய கோடல் ஒன்றை ஒன்று என்றல் - மணி: 27/62,63

பாத்திரம் ஏந்திய பாவையை கண்டலும்
இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி - மணி: 18/118,119

கானலும் கழிகளும் மணலும் கண்டலும்
பானலும் குவளையும் பரந்த புன்னையும் - யுத்1:4 25/1,2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *