சொல் பொருள்
கத்தை (கற்றை) – தொகுதியாக அமைந்த அழுக்குப் பொருள்.
கசடு – கலத்தில் அல்லது தளத்தில் அமைந்த வழுக்குப் பொருள்.
சொல் பொருள் விளக்கம்
கற்றை என்பது தொகுதி என்னும் பொருளது. குப்பைக் கூளம், தும்பு தூசி என்பன திரண்டால் கற்றையாம். கசடு என்பது தளத்துடன் பற்றிக் கொண்டுள்ள பாசியும் வழுக்கலும் போல்வன. கலத்தில் பற்றிக் கொண்டுள்ள களிம்பு போல்வன. இவை, மனத்தைப் பற்றிக் கொள்ளும் குற்றங்களுக்கு ஆகிக் கசடு எனவும் படும். “கற்க கசடற” என்றார் வள்ளுவர். (குறள் 391)
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்