Skip to content

கன்னிவிடியல்

சொல் பொருள்

(பெ) விடியலின் ஆரம்பம்

சொல் பொருள் விளக்கம்

விடியலின் ஆரம்பம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

early morning, dawn

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கன்னிவிடியல் கணை கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர – ஐங் 68/1,2

உதயத்திற்கு முற்பட்ட அதிகாலை வேளையில் திரண்ட தண்டினையுடைய ஆம்பல்
தாமரையைப் போல மலரும் ஊரினைச் சேர்ந்த தலைவனே!

விடியல் தோன்றிய அணிமைக்காலம் கன்னிவிடியல் எனப்பட்டது- குமரியிருட்டு என்னும்
வழக்குப் போல – ஔ.சு.து. விளக்கம்

கன்னிவிடியல் – இருள் நன்கு புலராத விடியற்காலம் – பொ.வே.சோ.விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *