சொல் பொருள்
கன்று – கன்றுக்குட்டி
காலி – எருமை, பசு முதலிய மாடுகள். கன்று காலி
சொல் பொருள் விளக்கம்
கன்றுகாலி மேய்ப்பதைச் ஒரு தொழிலாகவே செய்கின்றனர். ஊர்மாடுகள் ‘ஊர்க்காலிமாடு’ எனப்படும். ஊர்க்காலிமாடு மேய்த்தலை உரிமைத் தொழிலாகக் கொண்டு, விளைவுக் காலத்தில் களத்தில் உரிமைப்பங்கு(சுந்திரம்) பெறுதல் இன்றும் சிற்றூர்களில் உண்டு.
கன்றும் காலியுமாக மேயச் செல்லும் மாடு எனின் பால் வற்றிப்போன மாடாகும். இளங்கன்று உடையதாயின், கன்றை மட்டும் வீட்டில் நிறுத்தி மாட்டைக் காட்டுக்கு ஓட்டிச் செல்லுதல் வழக்கமாம். கன்று காலி தங்கிடமும், மேய்ப்பிடமும் ‘நத்தம் புறம்போக்கு’ என ஒதுக்கிவைக்கப்படுவதுண்டு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்