Skip to content
கருப்பை

கருப்பை என்பது கருப்பை எலி

1. சொல் பொருள்

(பெ) எலி, 

2. சொல் பொருள் விளக்கம்

கருப்பைஎலி என்றோர் எலி சங்க நூல்களில் சொல்லப்படுகின்றது.

” வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
குடந்தையஞ் செவிய கோட்டெலி யாட்டக்
கலியார் வரகின் பிறங்கு பீ ளொளிக்கும்

–புறம் , 321 .


” கவைமுட் கள்ளிப் பொரியரைப் பொருந்திப்
புதுவர கரிகாற் கருப்பை பார்க்கும்
புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பிற் “

–புறம் , 322 .


பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலந் தழீ இய வங்குடிச் சீறூர்

–புறம் , 324 .
” வன்பாலாற் கருங்கால் வரகின்
அரிகாற் கருப்பை அலைக்கும் பூழின் “

–புறம் , 384 .
” வில்லுடை வைப்பின் வியங்காட் டியவின்

வரிப்புற வணிலொடு கருப்பை யாடா “

–பெரும்பாண் , 82. 85 ,

கருப்பை எலி புன்புலத்தில் வாழ்ந்ததாகவும் கருங்கால் வரகு விளையும் வன்பாலில் காணப்பட்டதாகவும் கவை முட்கள்ளியில் பதுங்கியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளதைக் காணலாம் . காட்டருகாமையில் வறட்சியான கள்ளிக் காடுகளில் (Found sometimes in heavy serul sorrounded by forest) காணப்படும் எலியை விலங்கு நூலார் Metad என்ற வகை எலி என்பர் . கரிசல் மண் நிலத்தில் இந்த எலி காணப்படுமென்பர் . பருத்தி விளைந்த இடத்தில் மிகுதியாகக் காணப்படும் என்று விலங்கு நூலார் கூறுவர் . ( In cotton fields which they favour so much , metads can become a serious pest) பருத்தி வேலியில் கருப்பை காணப்பட்டதைத் தெளிவாகப் பருத்தி வேலிக்கருப்பை என்ற வரி குறிப்பிட்டுள்ளது. கரிசல்மண்ணில் வரகு விளையும் . இந்த வரகு விளையும் வன்பாலிலும் ( Block -cotton soil ) கள்ளியிலும் ( Prickly pear Hedge) கண்டதாக விலங்கு நூலார் கூறும் எலி கருப்பை எலி யென்பதில் சிறிதும் ஐயமில்லை . இந்த எலிக்குப் பெரிய , குவிந்த காதுகள் ( Large rounded ears )) உண்டென விலங்கு நூலார் கூறுவர் . புறநானூறும் ( 321 ) கோங்கு மரத்தின் ( Yellow sick cotton tree) மொக்கைப்போல் வளைந்து குவிந்த செவியென்று சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும் .

இந்த எலியைக் கோட்டெலி என்று புறநானூறு அழைக்கின்றது . கொல்லையில் வரப்பில் காணப்பட்டதால் கோட்டெலி என்று அழைக்கப்பட்டதென்று கூறுவர். இதைக் காட்டெலி என்றும் சிலர் கூறுவர் . இது கருநிறமானதால் கருப்பை என் றழைத்ததாகத் தெரிகின்றது . இதன் தோளில் சாம்பல் நிறமான மென் மயிர் அடர்த்தியாகக் காணப்படும் . நிகண்டு
களில் இவ்வெலியைக் காரெலி என்றனர். கல்லாடத்தில் கருப்பையின் வாலிக்குக் கொன்றையின் கரிய நீண்ட பழம் உவமையாகக் கூறப்பட்டுள்ளது . கடுக்கைச் சிறுகாய் அமைந்த வால் கருப்பை என்று கூறியிருப்பதைக் காணலாம் .கருப்பையின் வால் 6 அங்குல நீளமானதென்பர் . கடுக்கையின் சிறுகாயும்: அதே நீளமும் நிறமும் வரியும் அமைப்பும் உடையதைக் கண்டிருக்கலாம் .

கருப்பை
கருப்பை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

rat, Metad

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வரி புற அணிலொடு கருப்பை ஆடாது – பெரும் 85

வரியை முதுகிலே உடைய அணிலோடு, எலியும் திரியாதபடி,

புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் – புறம் 322/3

பருத்தி வேலி கருப்பை பார்க்கும் – புறம் 324/7

அரிகால் கருப்பை அலைக்கும் பூழின் – புறம் 384/5

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *