சொல் பொருள்
(பெ) பகைவர்,
சொல் பொருள் விளக்கம்
பகைவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
enemies, foes
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மை அறு சுடர் நுதல் விளங்க கறுத்தோர் செய் அரண் சிதைத்த செரு மிகு தானையொடு கதழ் பரி நெடும் தேர் அதர் பட கடைஇ சென்றவர் தருகுவல் என்னும் நன்றால் அம்ம பாணனது அறிவே – ஐங் 474 குற்றமற்ற என் ஒளிவிடும் நெற்றி முன்போல் விளங்க, பகைவர்கள் கட்டிய அரண்களை அழித்த போர்வன்மை மிக்க படையுடன் விரைவாக ஓடும் நெடிய தேரினைக் காட்டுவழிகள் வருந்துமாறு செலுத்திச் சென்றவரை, அழைத்துவருவேன் என்று கூறும் பாணனது அறிவு மிகவும் நன்றாய் இருக்கிறது!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்