Skip to content
கறி

கறி என்பது மிளகு

1. சொல் பொருள்

(வி) கொறி, கடித்துத்தின்னு, மெல்ல கடித்தல் (பெ) 1. மிளகு, 2. மாமிசம், இறைச்சி, புலால், அசைவம், 3. காரத்துடன் செய்யப்பட்ட ஒரு உணவு ஆகும்

உடல் என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்கு

2. சொல் பொருள் விளக்கம்

சங்கநூல்களில் இச்சொல் மிளகைக் குறிப்பதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நாளில் இச்சொல் பொதுவாக  சோற்றுடன் உண்ணப்படும் குழம்பு, பருப்பு, கீரை, மீன்கறி போன்ற பல்வேறு பக்க உணவுகளையும் குறிக்கிறது. மிளகு, அதன் காரச்சுவை பண்பைக் குறிக்கும் வகையில் ‘கறிமிளகு’ என்றே அழைக்கப்பட்டது

கறித்து துண்டாக்கி உண்ணப்படுவதால் இப்பெயர் பெற்றது?

காய்கறி, இணைச்சொல். மரக்கறி, ஊன்கறி என வழக்கு உண்டாயினும் கறி என்பது ஊனைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாகவும் வழங்குகின்றது. ‘கறிக்குழம்பு’ கறிவைத்தல் என்பவை ஊன் வழியாகச் சொல்லப்படுவனவே. கறி என்பது உடல் என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்கு. உங்களுக்கு உதவாமல் இந்தக்கறி இருந்து என்ன செய்ய என நெய்வேலியார் ஒருவர் வினாவிய வினாவுதலால் பொது வழக்கெனக் கொள்ள வாய்க்கின்றது.

கறி
கறி

மொழிபெயர்ப்புகள்

இத்தாவரம் தமிழில் மிளகு எனவும், கன்னடம்:மெனசு (menasu, ಮೆಣಸು) மலையாளம்: குறு மிளகு(Kuru Mulagu) தெலுங்கு: மிரியாலு அல்லது மிரியம் (miriyam, మిరియం) கொங்கணி: மிரியாகொனு (Miriya Konu) எனவும் அழைக்கப்படுகிறது.

English: Piper nigrum– Black pepper, Green pepper, Pink pepper, White pepper • Hindi: काली मिर्च Kali mirch • Marathi: गोलमिरिच Golmirich • Tamil: Kurumilagu • Malayalam: Kurumulaku • Telugu: Miryalatige • Kannada: Karimenasu • Urdu: Syah mirch • Gujarati: કાલો મિરિચ Kalomirich • Sanskrit: Marich

3. ஆங்கிலம்

eat by biting or nibbling, pepper, Piper nigrum

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கறி
கறி
திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை – குறு 338/1-4

முறுக்கேறிய கொம்புகளையுடைய இரலையாகிய தலைமைப்பண்புள்ள நல்ல ஆண்மான் செழுமையான பயற்றுப் பயிரைக் கறித்துத்தின்னும் துன்பமுடைய மாலைப்பொழுதினையும்

கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய – குறு 90/2

மிளகுக் கொடி வளரும் மலைப்பக்கத்தில் இரவில் முழங்கிய

கறி கொடி கரும் துணர் சாய பொறி புற - திரு 309

பைம் கறி நிவந்த பலவின் நீழல் - சிறு 43

உருப்பு-உறு பசும் காய் போழொடு கறி கலந்து - பெரும் 307

இஞ்சி மஞ்சள் பைம் கறி பிறவும் - மது 289

காலின் வந்த கரும் கறி மூடையும் - பட் 186

கரும் கொடி மிளகின் காய் துணர் பசும் கறி/திருந்து அமை விளைந்த தே கள் தேறல் - மலை 521,522

கறி வளர் அடுக்கத்து களவினில் புணர்ந்த - நற் 151/7

முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் - நற் 297/8

கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய - குறு 90/2

கறி வளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து - குறு 288/1

கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி - ஐங் 243/1

கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனா - கலி 52/17

கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது - அகம் 2/6

கண கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் - அகம் 112/14

அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ - அகம் 182/14

துறு கல் நண்ணிய கறி இவர் படப்பை - அகம் 272/10

கறிசோறு உண்டு வருந்து தொழில் அல்லது - புறம் 14/14

கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் - புறம் 168/2

மனை கவைஇய கறி மூடையால் - புறம் 343/3

பொன்னொடு வந்து கறியொடு பெயரும் - அகம் 149/10

மை படு சிலம்பின் கறியொடும் சாந்தொடும் - பரி 16/2

கறி வளர் தே மா நறும் கனி வீழும் - ஐந்70:8/2

கறி வளர் பூம் சாரல் கைந்நாகம் பார்த்து - திணை150:7/1

சோற்று உள்ளும் வீழும் கறி - பழ:150/4

கறி பட பகு வாய் புங்கம் கதத்துடன் இவனும் ஏவ - தேம்பா:16 42/3

கறி பட பகு வாய் புங்கம் கடைத்து அவை அவனும் காத்தான் - தேம்பா:16 42/4

மீன் கறி கற்ற ஒளி வேற்கு அஞ்சு இல கான் நின்று வெளிப்பட்ட - தேம்பா:26 160/1

ஊன் கறி கற்ற அரி அன்ன தவத்தின் மிக்கோன் உலகு அஞ்ச - தேம்பா:26 160/2

தேன் கறி கற்று இமிர் வண்டு ஆர் வனத்தின்-நின்று செழு ஞானம் - தேம்பா:26 160/3

தான் கறி கற்று உழிழ்ந்து என்ன தவறா நீதி சால்பு உரைப்பான் - தேம்பா:26 160/4

இனிமை கூர்தர மணத்தொடும் கறி சமைத்திடுவார் - சீறா:3140/4

வானம் மீதினும் கமழ்த்தின பொரி கறி வாசம் - சீறா:3141/4

செப்பும் தாழியில் கறி நனி சிறத்தலே வேலை - சீறா:4423/3

நெய்யில் வெம் கறி இலட்டுகம் ஓய்ந்தில நிறைந்த - சீறா:4424/4

அறுசுவை கறியுடன் அன்னம் ஈந்து மேல் - சீறா:3239/2

காலம் அன்றியும் கரும் கறி மூடையொடு - மது:14/210

கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க - வஞ்சி:24/60

ஏல வல்லியும் இரும் கறி வல்லியும் - வஞ்சி:25/41

கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின் - வஞ்சி:28/114

அளவு அறு நறு நெய்யொடு கறி அமை துவை - சிந்தா:1 122/2

மான் கறி கற்ற கூழை மௌவல் சூழ் மயிலை பந்தர் - சிந்தா:2 485/3

தேன் கறி கற்ற கூழை செண்பக மாலை வேல் கண் - சிந்தா:6 1487/1

ஊன் கறி கற்ற காலன் ஒள் மணி தட கை வை வேல் - சிந்தா:6 1487/2

மருவி பைம் கறி வாரி பழம் தழீஇ - சிந்தா:7 1606/2

ஊட்டுறு கறி கொள் தேமாங்கனி சுவை தயிரொடு ஏந்தி - சிந்தா:13 2972/3

குங்கும தாதும் பைம் கறி பழனும் - உஞ்ஞை:51/26

துற்ற பல கறி செற்றி அமலை செய் துப்பு ஒர் இமகிரி ஒப்பு என - வில்லி:4 48/1

சமைத்த பல் கறி அடிசில் தம் விருப்பினால் அருந்தி - வில்லி:27 81/2

மொண்டு சொரிதருகின்ற அடிசிலும் முந்து கறிகளும் வெந்த பால் - வில்லி:4 46/2

ஐந்து பல் வகையில் கறிகளும் வெவ்வேறு அறு சுவை மாறுமாறு அமைப்பேன் - வில்லி:19 14/2

கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம் - தேவா-சம்:420/1

கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலி காழி - தேவா-சம்:1107/2

கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் - தேவா-அப்:2114/2

கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் - தேவா-சுந்:23/1

கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே - தேவா-சுந்:161/4

கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே - தேவா-சுந்:476/4

கறித்து எழு கானப்பேர் கைதொழல் கருமமே - தேவா-சம்:3083/4

கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி - தேவா-சம்:3781/1

கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் - தேவா-சுந்:754/2

வளரும் கறி அறியா மந்தி தின்று மம்மர்க்கு இடமாய் - திருக்கோ:193/1

பொரித்த கறி போனகம் இளநீரும் - திருமந்:1920/2

வினையினால் வேறுவேறு கறி அமுது ஆக்கி பண்டை - 2.தில்லை:4 22/3

கணவனார்-தம்மை நோக்கி கறி அமுது ஆன காட்டி - 2.தில்லை:4 23/1

சீர் உடை அடிசில் நல்ல செழும் கறி தயிர் நெய் பாலால் - 3.இலை:4 22/3

பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும் - 5.திருநின்ற:1 203/2

கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட - 5.திருநின்ற:4 19/1

தீது_இல் பறை நிகழ்வித்து சென்ற தொண்டர் திரு அமுது கறி நெய் பால் தயிர் என்று இன்ன - 6.வம்பறா:1 566/3

தூய திரு அமுது கனி கன்னல் அறு சுவை கறி நெய் - 7.வார்கொண்ட:3 14/1

அச்சம் எய்தி கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன் - 7.வார்கொண்ட:3 61/1

பொச்சம் இல்லா திருத்தொண்டர் புனிதர்-தமக்கு கறி அமைக்க - 7.வார்கொண்ட:3 61/3

பட்ட நறையால் தாளித்து பலவும் மற்றும் கறி சமைத்து - 7.வார்கொண்ட:3 66/3

தெரியும் வண்ணம் செஞ்சாலி செழும் போனகமும் கறி அமுதும் - 7.வார்கொண்ட:3 73/2

மன்னு சுவையில் கறி ஆக்கி மாண அமைத்தீரே என்ன - 7.வார்கொண்ட:3 74/2

முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்து கொடுக்க முகம் மலர்ந்தார் - 7.வார்கொண்ட:3 75/4

வெந்த இறைச்சி கறி அமுதும் கலத்தில் காணார் வெருவுற்றார் - 7.வார்கொண்ட:3 83/4

ஆறு முடி மேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா - 7.வார்கொண்ட:3 88/1

மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால் - 8.பொய்:5 3/2

பொருந்து சுவையில் கறி அமுதும் புனித தண்ணீர் உடன் மற்றும் - 8.பொய்:5 5/2

கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனி உள்ளுறுத்த கலந்து அளித்து - 9.கறை:5 4/3

வினையினால் வேறுவேறு கறி அமுது ஆக்கி பண்டை - 2.தில்லை:4 22/3

கணவனார்-தம்மை நோக்கி கறி அமுது ஆன காட்டி - 2.தில்லை:4 23/1

சீர் உடை அடிசில் நல்ல செழும் கறி தயிர் நெய் பாலால் - 3.இலை:4 22/3

பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும் - 5.திருநின்ற:1 203/2

கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட - 5.திருநின்ற:4 19/1

தீது_இல் பறை நிகழ்வித்து சென்ற தொண்டர் திரு அமுது கறி நெய் பால் தயிர் என்று இன்ன - 6.வம்பறா:1 566/3

தூய திரு அமுது கனி கன்னல் அறு சுவை கறி நெய் - 7.வார்கொண்ட:3 14/1

அச்சம் எய்தி கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன் - 7.வார்கொண்ட:3 61/1

பொச்சம் இல்லா திருத்தொண்டர் புனிதர்-தமக்கு கறி அமைக்க - 7.வார்கொண்ட:3 61/3

பட்ட நறையால் தாளித்து பலவும் மற்றும் கறி சமைத்து - 7.வார்கொண்ட:3 66/3

தெரியும் வண்ணம் செஞ்சாலி செழும் போனகமும் கறி அமுதும் - 7.வார்கொண்ட:3 73/2

மன்னு சுவையில் கறி ஆக்கி மாண அமைத்தீரே என்ன - 7.வார்கொண்ட:3 74/2

முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்து கொடுக்க முகம் மலர்ந்தார் - 7.வார்கொண்ட:3 75/4

வெந்த இறைச்சி கறி அமுதும் கலத்தில் காணார் வெருவுற்றார் - 7.வார்கொண்ட:3 83/4

ஆறு முடி மேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா - 7.வார்கொண்ட:3 88/1

மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால் - 8.பொய்:5 3/2

பொருந்து சுவையில் கறி அமுதும் புனித தண்ணீர் உடன் மற்றும் - 8.பொய்:5 5/2

கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனி உள்ளுறுத்த கலந்து அளித்து - 9.கறை:5 4/3

கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினர் கணவனாரை - 2.தில்லை:4 20/4

பழி முதல் பறிப்பார் போல பறித்து அவை கறிக்கு நல்க - 2.தில்லை:4 21/4

கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்து கூட்டி கடிது அமைப்பார் - 7.வார்கொண்ட:3 65/4

மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து - 2.தில்லை:4 22/1

இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன் பின் - 5.திருநின்ற:4 23/1

தூய நல் கறிகள் ஆன அறு வகை சுவையால் ஆக்கி - 5.திருநின்ற:5 23/1

தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவை அமைத்து - 6.வம்பறா:5 4/1

இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்க படைக்க என - 7.வார்கொண்ட:3 72/4

விரவிய போனகம் கறிகள் விதம் பலவாக சமைத்து - 7.வார்கொண்ட:4 124/2

ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார் - 7.வார்கொண்ட:3 51/4

அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறு ஓர் அரும் கலத்து - 7.வார்கொண்ட:3 66/2

அடிசிலும் கறியும் எல்லாம் அழகுற அணைய வைத்து - 5.திருநின்ற:5 30/2

இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும்
   அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப - 6.வம்பறா:2 179/1,2

புனிதர்-தம்மை போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின் - 7.வார்கொண்ட:3 72/2

இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்தருளி - 7.வார்கொண்ட:3 85/3

வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்து கறியும் போனகமும் - 7.வார்கொண்ட:4 72/3

கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி - நாலாயி:964/1

வேம்பும் கறி ஆகும் என்று - நாலாயி:2475/4

காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும் - நாலாயி:251/2

கண்ணாலம் செய்ய கறியும் கலத்து அரிசியும் ஆக்கி வைத்தேன் - நாலாயி:252/3

பறிக்க பச்சிறைச்சிக்கண் கறி குப்பை சிர சிக்கு பரப்பு ஒய் கட்டற புக்கு பொருதோனே - திருப்:328/7

எண் தோளர் காதல் கொண்டு காதல் கறியே பருகு செங்காடு மேவி பிரகாச மயில் மேல் அழகொடு - திருப்:813/15

குறை நறை கறி குப்பை பருப்பொடு - பால:2 37/2

கலை உவா மதியே கறி ஆக வன் - ஆரண்:6 67/1

சங்கமும் கறி கிழங்கு என இடைஇடை தழுவி - யுத்1:6 26/2

வெள்ளை நறும் போனகமும் மிகு பருப்பும் பொரி கறியும்
தள்ள அரிய முக்கனியும் சருக்கரையும் நறு நெய்யும் - யுத்4-மிகை:41 194/1,2

கறி கொடி கரும் துணர் சாய பொறி புற - திரு 309
கறி
கறி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *