Skip to content

சொல் பொருள்

(பெ) 1. உழுவதற்குப்பயன்படும் மரத்தாலான கருவி, 2. இசைக்கருவிகள் போன்றவை வைக்கும் பை, 

சொல் பொருள் விளக்கம்

உழுவதற்குப்பயன்படும் மரத்தாலான கருவி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

plough

hold-all for keeping musical instruments

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி – பெரும் 188

குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டமையால்

தலை புணர்த்து அசைத்த பல் தொகை கலப்பையர்
இரும் பேர் ஒக்கல் கோடியர் – அகம் 301/22,23

தலையினைச் சேர்த்துக்க் கட்டிய பல தொகையாகிய இசைக்கருவிகளின் பையினராகிய
மிகப் பெரிய சுற்றத்தினையுடைய கூத்தர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *