Skip to content

சொல் பொருள்

(வி) 1. இடி, 2. இடித்துரை, 3. இகழ், 4. கூறு. சொல்,

சொல் பொருள் விளக்கம்

இடி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

thunder, rebuke, dishonour, discredit, say, tell

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கடு விசை உருமின் கழறு குரல் அளைஇ – குறு 158/2

மிகுந்த வேகத்தையுடைய பேரிடியின் இடிக்கும் முழக்கத்தோடு கலந்து

நின்னை யான் கழறுதல் வேண்டுமோ – கலி 100/22

உன்னை நான் கடிந்துரைக்கவும் வேண்டுமோ?

அவை புகு பொருநர் பறையின் ஆனாது
கழறுப என்ப அவன் பெண்டிர் – அகம் 76/5,6

அவையில் புகும் பொருநரின் பறையைப்போல ஒழியாமல்
என்னை இகழ்வர் என்று கூறுவர் அவன் பெண்டிர்

எ வாய் சென்றனை அவண் என கூறி
அன்னை ஆனாள் கழற – நற் 147/4,5

எவ்விடத்துக்குச் சென்றாய் அங்கே? என்று கூறி
அன்னை மனம் அமையாதவளாய் நம்மிடம் கூற

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *