Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பல தெருக்கள் கூடுமிடம் /பிரியும் இடம், 2. ஒரு கிழங்கு, கிழங்குள்ள ஒரு கொடி, 3. மனச் சஞ்சலம்

சொல் பொருள் விளக்கம்

பல தெருக்கள் கூடுமிடம் /பிரியும் இடம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Place where several ways meet or diverge

a rooted creeper

distress, affliction

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உல்கு உடை பெரு வழி கவலை காக்கும் – பெரும் 81

சுங்கம் கொள்ளுதலையுடைய பெரிய வழிகளில் பிரியும் வழியைப் பாதுகாக்கின்ற

கவலை முற்றம் காவல் நின்ற – முல் 30

நாற்சந்தியான முற்றத்தில் காவலாக நின்ற

கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப – மது 241

கவலைக்கிழங்கு எடுத்த குழிகளில் அருவிநீர் (விழுந்து)ஒலிக்க,

பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற் 144/4

பேதை நெஞ்சம் மனச்சஞ்சலத்தால் வருந்த

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *