சொல் பொருள்
காதுகுத்தல் – ஏமாற்றல்
சொல் பொருள் விளக்கம்
‘காது குத்துதல்’ பெருவிழாவாக இந்நாளிலும் நிகழ்கின்றது. இது பழமையான வழக்கம். காது குத்துதல் படிப்பறிவில்லார் செயல் எனப் படித்தவர்கள் எண்ணிய நிலையில் “என்ன காது குத்துகிறாயா? ‘அதற்கெல்லாம் வேறு ஆள் பார்த்துக்கொள்” என்பது வழக்காயிற்று. காது குத்துதல் குழந்தைப் பருவத்தில் நிகழ்த்தப்படும் செயல். அதனைக் குழந்தை விரும்பாது. அதனைச் செய்வதற்குப் பெற்றோர்க்கு விருப்பம். ஆதலால் குழந்தைக்குப் பண்டம் தருதல் விளையாட்டு காட்டுதல் பொம்மை தருதல் ஆகியவை செய்து ஏமாற்றித் தங்கள் விருப்பை நிறைவேற்றிக் கொள்வர். ஆதலால் காது குத்துதலுக்கு ஏமாற்றுதல் பொருள் ஏற்பட்டது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்