Skip to content

காது கொடுத்தல்

சொல் பொருள்

காது கொடுத்தல் – கேட்டல்

சொல் பொருள் விளக்கம்

காது உறுப்புப் பொருள். முதலொடு கழற்றக்கூடாத உறவு(தற்கிழமை)ப் பொருள். கொடுத்தல் என்பது கொடுக்கும் உறவு (பிறிதின் கிழமை)ப் பொருள் – கொடாப் பொருளைக் கொடுக்கும் பொருளாகக் கூறப்படுதல் அறிக. இங்குக் காது என்பது அப்பொறியைக் குறியாமல், அதன் புலனைக் குறிப்பதாக அமைகின்றது. அதாவது ‘கொடுத்தல்’ என்பது கேட்டலைக் குறித்தது. “நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேளேன்” “காதைக் கொடுப்பதே இல்லை; பிறகு எப்படி விளங்கும்” என்பவை வழக்குச் செய்திகள். சருக்கரைப் புலவர் என்பார் “காசு கொடுத்துக் கேளாவிட்டாலும், காது கொடுத்தாவது கேட்கக் கூடாதா?” என்பார்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *