Skip to content
காந்தள்

காந்தள் என்பது ஒரு ஏறுகொடி, பூ. சிம்பாப்வே நாட்டின் தேசிய மலராகும். தமிழ்நாட்டின் மாநில மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது. தமிழீழத்தின் தேசிய மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது.

1. சொல் பொருள்

(பெ) 1. ஒரு செடி, பூ, கார்த்திகைப்பூ; 2.  வெட்சிந் திணையின் பகுதியாக வரும் ஒரு துறை.

2. சொல் பொருள் விளக்கம்

காந்தள் மலர் குறிஞ்சித் திணைக்குரிய பூ என்பதால் குறிஞ்சிக்காந்தள் என்றே அறியப்படும்

ஒரு செடி, பூ, கார்த்திகைப்பூ, கண்வலிக்கிழங்கு, கலைப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு, அக்கினிசலம், கலப்பை, இலாங்கிலி, தலைச்சுருளி, கோடல், கோடை, பற்றி, தோன்றி, வெண்தோண்டி, வெண்காந்தள், செங்காந்தள், குருதிப்பூ, ஆண்காந்தள், பெண்காந்தள், காக்கைமூக்குப் பூ.

 1. இதன் பூத்தீக்கொழுந்து போலக் காணப்படுவதால், அக்கினிசலம் எனப்படும்.
 2. இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும், இலாங்கிலி எனவும் அழைக்கப்படும்.
 3. இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.
 4. இதுபற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும்.
 5. வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்றும் அழைக்கப்படும்.
 6. கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது.
 7. மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும்.
 8. நாட்டு மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர்.
 9. பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததைப் பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

இந்தப் பூவை உற்றுப்பார்த்தால், கண்வலி வரும் என்று சொல்கிறார்கள், அதனால் இதை `கண்வலிப்பூ’ என்றும் அழைக்கிறார்கள்

காந்தள்
காந்தள்

இலக்கியத்தில் காந்தளை,

 • வளை உடைந்தன்ன வள் இதழ்க்காந்தள்
 • தீயின் அன்ன ஒண் செங்காந்தள்
 • செழுங் குலைக்காந்தள் கை விரல் பூப்பவும்
 • பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக்காந்தள்
 • கைபோல் பூத்த கமழ் குலைக்காந்தள்
 • உடைவளை கடுப்ப மலர்ந்தகாந்தள்

காந்தள் தாவரத்தை அடைமொழியுடன், சங்க இலக்கிய ஆசிரியர்கள்

 1. ஒண்செங்காந்தள்        கபிலர்
 2. கமழ்பூங்காந்தள்         கபிலர்
 3. நறவுகுலைகாந்தள்      கபிலர்
 4. நாறுகுலைக்காந்தள்     கபிலர்
 5. போது அவிழ்காந்தள்     மருதனார்
 6. அலங்குகுலைக்காந்தள்  தங்காற் பொற் கொல்லனார்
 7. சினைஒண்காந்தள்        மதுரைக் கணக்காயனார்
 8. சுடர்ப்பூங்காந்தள்          நக்கீரர்
 9. முகைஅவிழ்ந்தகாந்தள்   கம்பூர் கிழான்
 10. வள்இதழ்க்காந்தள்         பெருங்கௌசிகனார்
 11. தண்நறுங்காந்தள்          பரணர்
காந்தள்
காந்தள்

மொழிபெயர்ப்புகள்

சிங்களம்: நியன்கலா, சமஸ்கிருதம்: லன்கலி, இந்தி: கரியாரி, மராட்டி: மெத்தொன்னி, ஈந்தை, காதியநாக் கன்னடம்: கண்ணினஹத்தே, கரதி

Englishflame lily, Flame Lily, Gloriosa lilly Afrikaans: Vlamlelie, Rooiboslelie العربية: باهرة هندية مصرى: باهره هنديه български: Разкошна глориоза বাংলা: উলট চন্ডাল čeština: Glorióza vznešená Deutsch: Ruhmeskrone Schweizer Hochdeutsch: Ruhmeskrone ދިވެހިބަސް: ވިހަ ލަގޮނޑި فارسی: سوسن آتش suomi: Keijunlilja हिन्दी: कलिहारी Bahasa Indonesia: Kembang sungsang Jawa: Kembang sungsang ಕನ್ನಡ: ಅಗ್ನಿಶಿಖಾ Madhurâ: Manḍhâlika മലയാളം: മേന്തോന്നി Bahasa Melayu: Pokok Kembang Songsang Nederlands: Klimlelie ଓଡ଼ିଆ: ଲହଲାଙ୍ଗଳୀ ਪੰਜਾਬੀ: ਕਲਿਹਾਰੀ polski: Glorioza wspaniała русский: Глориоза роскошная සිංහල: නියඟලා slovenčina: glorióza pyšná Sunda: Katongkat svenska: Klänglilja, Klänglilje தமிழ்: காந்தள் తెలుగు: అడవినాభి ไทย: ดองดึง lea faka-Tonga: Lile veʻemoa Tiếng Việt: Ngót nghẻo 中文: 嘉兰 中文(中国大陆): 嘉兰 中文(臺灣): 嘉蘭

3. ஆங்கிலம்

glory lily, Gloriosa superba, Flame lily, climbing lily, creeping lily, gloriosa lily, tiger claw, fire lily, agnishikha

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறு பகை - பொருள். புறத்:5/2

பொருத யானைப் புகர்முகங் கடுப்ப‌
மன்றத்துறுகன் மீமிசைப் பலவுடன்
ஒண் செம்காந்தள் அவிழும் நாடன் - குறு 284/3

அம்புகள் தாக்கியதால் உண்டாகும் புள்ளிகள் உடைய, போரில் பங்கேற்ற யானையின் முகத்தைப் போன்ற கல்லின் மீது பல காந்தள் மலர்கள் ஒருசேர மலரும் வனப்புடைய நாட்டின் தலைவன்

போர்தோற்றுக் கட்டுண்டார்கை போல்
கார்தோற்றும் காந்தள் செறிந்த கவின் - பரி 18/35

விலங்கால் பிணைக்கப்பட்ட கைகளின் குவிந்த நிலை போலிருக்குமாம் மலராகப் போவதற்கு முந்தைய காந்தள்.

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயம் என்றெண்ணிப் படிவண்டைச் செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து - நள:184/3

நளன் தமயந்தியுடன் தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கையில், பெண்ணொருத்தி மலர் பறித்துக் கொண்டிருக்கிறாள். அவளின் முகத்தை தாமரை என்றெண்ணி வண்டொன்று மொய்க்கிறது. உடனே அவள் முகத்தைப் பாதுகாக்க கைகளால் மூடிக் கொள்கிறாள். இப்போது வண்டு அவளின் கைவிரல்களை காந்தள் என்றெண்ணி அதை நோக்கிப் பாய்ந்ததால் வியர்த்துப் போகிறாள் அவள்.

கை போல் பூத்த கமழ் குலை காந்தள் – பரி 19/76

கைவிரல்கள் போல் பூத்த கமழ்கின்ற குலைகளையுடைய காந்தளும்

சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள்/பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன் - திரு 43,44

வண்டு மொய்க்காத, தீ போன்ற, காந்தள் மலர்களை மாலையை சூடுபவன் என்று பொரு

காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது
வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும்
தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடனறி மாக்கள் போல - குறு 265/1

நன்கு வளர்ந்த காந்தள் மொட்டு வண்டு அருகில் வந்தவுடன் தானாகவே இதழ் அவிழுமாம். எதைப் போல? சான்றோரைக் கண்டவுடன் சற்று நகர்ந்து இடம் தரும் அவர்களை அறிந்த மனிதர்களைப் போல
காந்தள்
காந்தள்
அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலரந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக், கிளையொடு,
கடுங்கண் கேழல் உழுத பூழி,
நன்னாள் வருபதம் நோக்கிக், குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச்,
சாந்த விறகின் உவித்த புன்கம்,
கூதளங் கவினிய குளவி முன்றில்,
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ - புறம் 168/2,3

மிளகுக் கொடிகள் சுற்றிப்படர்ந்திருக்கும் மூங்கில் காடு. அருவி புகுந்தோடும் அத்தகைய காட்டின் நிலமெங்கும் காந்தள் மலர்ந்திருக்கும். காந்தளின் கிழங்கை உண்ண காட்டுப் பன்றிகள் நிலத்தை தோண்டியதால், உழுவதற்கு தேவையின்றி அப்படியே அந்நிலத்தில் தினை விதைப்பார்களாம். அதை பசுக்கள் மேயுமாம். தினை மேய்ந்த பசுக்களின் பால் கறந்து அதை மான்கறியில் கலந்து, சாதாரண விறகல்ல, சந்தன விறகில் தீ மூட்டி சமைப்பார்களாம். அப்படி தயாரான உணவை, கூதளம் பூக்கள் தரையெங்கும் பரவிக் கிடக்கும் வீட்டு முற்றத்தில் வாழை இலையிலிட்டு வருபவர்களுக்கெல்லாம் விருந்தோம்புவார்களாம்!

பழு மிளகு உக்க பாறை நெடுஞ்சுனை
முழு முதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தென,
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை, வியல் ஊர்ச்
சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி
அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும், சாரல்
வரையர மகளிரின் சாஅய் விழைதக
விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய் நன் பல
வம்பு விரி களத்தின், கவின் பெறப் பொலிந்த
குன்று கெழு நாடன் - குறி 196,197

விழாக் களத்தில் ஒலிக்கும் இசைக்கேற்றவாறு கயிற்றின் மீதேறி நடனமாடி களைப்புற்ற பின் தோன்றும் மங்கையின் மெதுவான அசைவுகள் போல் மயிலொன்று ஆடிக்கொண்டிருக்கிறதாம். என்னாயிற்று மயிலுக்கு? பழுத்த மிளகுகள் விழுந்த பாறையில் கிடக்கும் மாங்கனிகள் உடைந்து, வண்டுகள் போகும் வழியில் இறைத்த தேனுடன் கலந்து, மலையின் மேலிருந்து கீழ் விழுந்து நசிந்த‌ பலாவின் சுளைகளும் இணைந்து பாறையின் சுனை நீருடன் சேர்ந்ததில், கள்ளாய் மாறிய நீரைக் குடித்த மயில் அப்படித்தான் ஆடுமாம்! எந்த இடத்தில் ஆடுகிறதாம்? இத்தனை வளம் மிக்க மலையின் உச்சியில் உள்ள பெண் தெய்வங்கள் ஆடுவதால் மலையெங்கும் பூத்திருக்கும் காந்தள் மலர்கள் அதன் கிளைகளிலிருந்து கீழ்விழுந்து, காந்தளால் ஆன ஆடைவிரிப்பு போன்ற தளத்தை மேடையாக்கி ஆடுகிறதாம் மயில். இப்படிப்பட்ட வனப்புமிகு இடத்தைச் சேர்ந்தவனாம் தலைவன். நன்றி
காந்தள்
காந்தள்
கடவுள் கல்சுனை , அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு ,காந்தள்
குருதி ஒண்பூ , உருகெழக் கட்டிப்
பெருவரை அடுக்கப் பொற்பச் சூர் மகள்

அருவி இன்னியத்து ஆடு நாடன்
மார்பு தர வந்த, படர்மலி அருநோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும் – அண்ணாந்து
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே! - நற் 34/2,3

இது கடவுள் மலை! அதிலே கல் சுனை!
சுனை = இயற்கையான நீர் ஊற்று;
(சரவணப் பொய்கை) பொய்கை = இயற்கை; குளம் = செயற்கை
அதிலே, அடை இறந்து = அடைச்சிக்கிட்டு இருக்கும் இலைகளை விலக்கி,
மேல் நோக்கி மலர்ந்த = குவளைப் பூ!
காந்தள் குருதி ஓண் பூ = Blood Red – Flaming Flower;
காந்தள் = முருகனின் பூ;
தமிழ் ஈழத்தின் தேசிய மலரும் கூட!
இந்தப் பூக்களை ஒன்னாத் தொடுத்து, அந்த மலை நாட்டுப் பெண்
அருவியில் இன்பமாக் குளித்தாள்; யாரோடு? = குறிஞ்சி நாடனோடு!
அவன் மார்பைப் புணர்ந்ததால், இவளுக்கு (காதல்) நோய்!
அணங்கு “அன்மை” அறிந்தும் = ஆவி பிடிக்கவில்லை என அறிந்தும்…
அண்ணாந்துக்கிட்டு, கடம்ப மாலையைத் தலையில் சூடிக்கிட்டு ஆடுறான் பூசாரி…
எலே, முருகு என்னும் ஆவியை இறக்க வந்த சாமியாடி!
முருகா… நீ கடவுளே ஆனாலும் ஆகுக!
(உனக்குக் கூடவா இவள் துன்பத்தின் உண்மையான காரணம் தெரியலை?)
மடவை = அறியாதவன்
மன்ற மடவை = நிச்சயமா, நீ மடப்பய தான்:)
வாழிய முருகே = முருகா, நீ நல்லா இருடா, நல்லா இரு! நன்றி

அலங்குகுலைக் காந்தள்
நறுந்தா தூதுங்
குறுஞ்சிறைத் தும்பி
பாம்புமிழ் மணியிற்
றோன்றும் - குறு 239/3,4

காந்தள் பாம்பிற்கும் வண்டு பாம்பு உமிழும் மணிக்கும் உவமை அமைந்துள்ளது. பாம்பும் மணியும் அச்சத்தைத் தரும் தோற்றத்தைத் தந்தது போல தலைவன் - தலைவி நட்பும் அஞ்சுதற்கு உரியதாயிற்று என்பது குறிப்புப் பொருள்.

தகையவர் கை செறித்த தாள் போல காந்தள்/முகையின் மேல் தும்பி இருக்கும் பகை எனின் - கலி 43/8,9

காந்தள் மலரில் தேன் ஊதும் வண்டு தங்க மோதிரத்தின் மேல் பதித்த நீலக்கல் போலத் தோன்றுகிறதாம்.
காந்தள்
காந்தள்
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் - பொரு 33

கொழும் காந்தள் மலர் நாகத்து - பொரு 209

செழும் குலை காந்தள் கை விரல் பூப்பவும் - சிறு 167

காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்து ஆங்கு - பெரும் 372

ஒண் செம்காந்தள் ஆம்பல் அனிச்சம் - குறி 62

காந்தள் அம் துடுப்பின் கவி குலை அன்ன - பட் 153

தீயின் அன்ன ஒண் செம்காந்தள் - மலை 145

காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி - மலை 336

வளை உடைந்து அன்ன வள் இதழ் காந்தள்/நாகம் திலகம் நறும் காழ் ஆரம் - மலை 519,520

மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல் - நற் 14/7

காந்தள் ஊதிய மணி நிற தும்பி - நற் 17/10

நின்ற வேனில் உலந்த காந்தள்/அழல் அவிர் நீள் இடை நிழல்_இடம் பெறாஅது - நற் 29/1,2

காந்தள் அம் சிறுகுடி பகுக்கும் - நற் 85/10

காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்ப - நற் 161/7

மலை செம்காந்தள் கண்ணி தந்தும் - நற் 173/2

போது பொதி உடைந்த ஒண் செம்காந்தள் - நற் 176/6

அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்து - நற் 185/8

மெல் விரல் மோசை போல காந்தள்/வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப - நற் 188/4,5

செம் புடை கொழு முகை அவிழ்ந்த காந்தள்/சிலம்பு உடன் கமழும் சாரல் - நற் 294/7,8

யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள்/கமழ் குலை அவிழ்ந்த நயவரும் சாரல் - நற் 313/6,7

முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள்/குலை_வாய் தோயும் கொழு மடல் வாழை - நற் 355/2,3

அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக - நற் 359/2

காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தே - நற் 379/13

குருதி ஒப்பின் கமழ் பூ காந்தள்/வரி அணி சிறகின் வண்டு உண மலரும் - நற் 399/2,3

காந்தள் வேலி ஓங்கு மலை நன் நாட்டு - குறு 76/1

காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து என - குறு 100/3

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் - குறு 167/1

கொண்டலின் தொலைந்த ஒண் செம்காந்தள் - குறு 185/6

அருவி ஆர்ந்த தண் நறும் காந்தள்/முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல் - குறு 259/2,3

காலை வந்த முழுமுதல் காந்தள்/மெல் இலை குழைய முயங்கலும் - குறு 361/4,5

காந்தள் அம் சிறுகுடி கமழும் - குறு 373/7

நறும் தண் சிலம்பின் நாறு குலை காந்தள்/கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி நின் - ஐங் 226/2,3

நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும் - ஐங் 254/2

மலர்ந்த காந்தள் நாறி - ஐங் 259/5

சிலம்பு கமழ் காந்தள் நறும் குலை அன்ன - ஐங் 293/1

சிவந்த காந்தள் முதல் சிதை மூதில் - பதி 15/11

அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து - பதி 21/36

காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர் - பதி 30/9

மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய - பதி 67/19

காந்தள் அம் கண்ணி செழும் குடி செல்வர் - பதி 81/22

மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற - பரி 8/25

சினை வளர் வேங்கை கணவிரி காந்தள்/தாய தோன்றி தீ என மலரா - பரி 11/20,21

நீர் அயல் கலித்த நெரி முகை காந்தள்/வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரை-தொறும் - பரி 14/13,14

கை போல் பூத்த கமழ் குலை காந்தள்/எருவை நறும் தோடு எரி இணர் வேங்கை - பரி 19/76,77

காந்தள் கடி கமழும் கண்வாங்கு இரும் சிலம்பின் - கலி 39/16

எடுத்த நறவின் குலை அலம் காந்தள்/தொடுத்த தேன் சோர தயங்கும் தன் உற்றார் - கலி 40/12,13

கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை - கலி 45/2

உயர் முகை நறும் காந்தள் நாள்-தோறும் புதிது ஈன - கலி 53/5

அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் - கலி 59/3

நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள்/போது அவிழ் அலரின் நாறும் - அகம் 4/15,16

பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில் - அகம் 18/15

முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள்/நீடு இதழ் நெடும் துடுப்பு ஒசிய தண்ணென - அகம் 78/8,9

ஒண் செம்காந்தள் அவிழ்ந்து ஆங்கண் - அகம் 92/9
காந்தள்
காந்தள்
அலங்குகுலைக் காந்தள்
அணிமலர் நறுந்தா தூதுந் தும்பி
கையாடு வட்டில் தோன்றும்
மையாடு சென்னிய மலைகிழவோனே - அகம் 108/15,16

பல அரும்புகளை நீட்டி அசைகின்ற பூங்கொத்துடைய காந்தளின் அழகிய மலரின் நறிய தாதை ஊதும் தும்பி சூதாடு கருவியில் அழகிய மைபோற் றோன்றும் கரிய சென்னியையுடைய மலையுடை நாடன் தனியே வருதலை அஞ்சான்” (ந.சி.கந்தையா உரை)

வேங்கை விரி இணர் ஊதி காந்தள்/தேன் உடை குவி குலை துஞ்சி யானை - அகம் 132/11,12

திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள்/கொழு மடல் புது பூ ஊதும் தும்பி - அகம் 138/17,18

போந்தை முழு_முதல் நிலைஇய காந்தள்/மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த - அகம் 238/16,17

காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது - அகம் 312/5

சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல் - அகம் 338/7

உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை - அகம் 368/8

உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள்/அடை மல்கு குளவியொடு கமழும் சாரல் - புறம் 90/1,2

யாம் தன் தொழுதனம் வினவ காந்தள்/முகை புரை விரலின் கண்ணீர் துடையா - புறம் 144/8,9

வேங்கையும் காந்தளும் நாறி - குறு 84/4

கடவுள் காந்தளுள்ளும் பல உடன் - அகம் 152/17

கல் ஓங்கு உயர் வரை மேல் காந்தள் மலராக்கால் - நாலடி:29 3/1

குலை உடை காந்தள் இன வண்டு இமிரும் - ஐந்70:3/2

கண முகை கை என காந்தள் கவின் - திணை50:2/1

ஓங்கல் இறுவரை மேல் காந்தள் கடி கவின - திணை50:3/1

கான் யாறு கால் சீத்த காந்தள் அம் பூம் தண் பொதும்பர் - திணை150:29/3

இகந்து ஆர் விரல் காந்தள் என்று என்று உகந்து இயைந்த - திணை150:72/2

கார் தோன்றி பூவுற்ற காந்தள் முகை விளக்கு - திணை150:118/1

காந்தள் அரும் பகை என்று கத வேழம் - கைந்:9/1

காந்தள் மிசை ஒரு தாமரையின் அலர் காணல் என அரு மா தவன் - தேம்பா:5 118/1

காந்தள் நேரிய செம் கரத்து ஏந்தினள் - தேம்பா:10 113/1

பரு மணி காந்தள் கையால் பயிர் அளி கிளி போல் கீதம் - தேம்பா:15 182/2

துணி நிலை பசும் பூம் காந்தள் துணை கையில் தாங்க கண்டான் - தேம்பா:16 4/4

கடி மணி விளங்கவும் கை அம் காந்தள் சூழ் - தேம்பா:32 66/2

கடியாய் அலர்ந்த ஒளிர் காந்தளின் நேர் கரத்தில் - தேம்பா:5 79/1

ஆடலின் ஆவித்து என்று அலர்ந்த காந்தளே - தேம்பா:1 48/4

கை மறுத்து அதிசயித்து அலர்ந்த காந்தளை
 பை மறுத்து அவிழ் அரா என்று பாய் மயில் - தேம்பா:30 53/2,3

காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து - புகார்:6/98

மரகத மணி தாள் செறிந்த மணி காந்தள் மெல் விரல்கள் - புகார்:7/10

காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல் - புகார்:7/204

காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை - மணி:3/120

காந்தள் அம் செம் கை தலை மேல் குவிந்தன - மணி:9/2

காந்தள் அம் செம் கை தளை பிணி விடாஅ - மணி:18/68

கை நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி - சிந்தா:0 17/2

கை மலர் காந்தள் வேலி கண மலை அரையன் மங்கை - சிந்தா:1 208/1

அஞ்சி வருத்து நுசுப்பினாள் வளை கை உடைத்து மணி காந்தள்
  அஞ்ச சிவந்த மெல் விரல் சூழ் அரும் பொன் ஆழி அகற்றினாள் - சிந்தா:1 351/3,4

சேல் அடு கண்ணி காந்தள் திரு மணி துடுப்பு முன் கை - சிந்தா:1 354/3

வால் அரக்கு எறிந்த காந்தள் மணி அரும்பு அனைய ஆகி - சிந்தா:3 663/1

கை மலர்ந்து அனைய காந்தள் கடி மலர் நாறு கானம் - சிந்தா:5 1214/1

தக்கார் போல் கைம்மறித்த காந்தள் அந்தோ தகாது எனவே - சிந்தா:5 1227/3

அரவு பைத்து ஆவித்து அன்ன அம் காந்தள் அவிழ்ந்து அலர்ந்தன - சிந்தா:7 1651/2

துணை மலர் காந்தள் ஊழ்த்து சொரிவ போல் தோன்றி முன்கை - சிந்தா:7 1742/3

காந்தள் அம் கடி மலர் கண்ணி நெற்றியர் - சிந்தா:7 1848/1

காந்தள் அம் முகிழ் விரல் கையினால் பிடித்து - சிந்தா:8 1992/3

குழிய பெரிய கோல் முன்கை மணி ஆர் காந்தள் குவி விரல் மேல் - சிந்தா:13 2696/1

சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள்
  பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன் - திரு 43,44

காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும் - சீறா:54/2

கோல் தொடி கர காந்தள் தாமரை முகம் குழைக்க - சீறா:209/4

காந்தள் மெல் இதழ் பசும் தொடி கரத்தினால் விரைவின் - சீறா:335/2

மதித்து முன் நடத்தி காந்தள் மலர் கரம் சிரசில் ஏற்றி - சீறா:428/2

முத்து அணி நிரைத்த பீடம் முன்றிலில் காந்தள் கையால் - சீறா:634/3

கந்துகம் எடுத்து காந்தள் கரத்தினில் ஏந்தி ஆடும் - சீறா:931/1

அருத்திய துயர காற்றால் அவதியுற்று அலைந்து காந்தள்
 கரத்து அணி பணிகள் யாவும் கருத்துடன் இழந்து வாசம் - சீறா:1159/2,3

குலிகம் ஆர்ந்தன போல் அரக்கினும் சிவந்த கொழு மடல் காந்தள் அம் கரத்தாள் - சீறா:1965/1

பொன் தொடி காந்தள் செம் கை மடந்தையர் புகலலுற்றார் - சீறா:3181/4

பகிர் ஒளி காந்தள் அம் கை விரல் எனும் பவள கொப்பின் - சீறா:3214/3

காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே - தேவா-சம்:788/4

விரை சேர் பொன் இதழி தர மென் காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே - தேவா-சம்:1419/4

கை இலங்கு மறி ஏந்துவர் காந்தள் அம் மெல் விரல் - தேவா-சம்:1540/1

கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர் காந்தள் அம் குறி - தேவா-சம்:2043/1

காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம் - தேவா-சம்:2769/2

பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதிநியமத்து - தேவா-சம்:3922/1

வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் வண் காந்தள் ஒண் போது - தேவா-அப்:900/3

பொன் காட்ட கடி கொன்றை மருங்கே நின்ற புன காந்தள் கை காட்ட கண்டு வண்டு - தேவா-அப்:2842/3பூ புரை அஞ்சலி காந்தள் காட்ட - திருவா:3/75

குரு வளர் பூம் குமிழ் கோங்கு பைம் காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ - திருக்கோ:1/2

விரிந்தன காந்தள் வெருவரல் கார் என வெள்_வளையே - திருக்கோ:279/4

முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி தன் ஏர் அளப்பாள் - திருக்கோ:121/2

அளிதர காந்தளும் பாந்தளை பாரித்து அலர்ந்தனவே - திருக்கோ:324/4

போன்று இ கடி மலர் காந்தளும் போந்து அவன் கை அனல் போல் - திருக்கோ:325/3

மொய் மலர் காந்தளை பாந்தள் என்று எண்ணி துண்ணென்று ஒளித்து - திருக்கோ:233/3

எரி அவிழ் காந்தள் மென் பூ தலை தொடுத்து இசைய வைத்து - 6.வம்பறா:1 1102/1

காந்தள் முகிழ் விரல் சீதைக்கு ஆகி கடும் சிலை சென்று இறுக்க - நாலாயி:329/3

காந்தள் விரல் மென் கலை நல் மடவார் - நாலாயி:1358/3

காந்தள் மலர் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து குரக்கு அரணத்தொடு மட்டிடு - திருப்:266/9

கடி தடம் உற்று காந்தள் ஆம் என இடை பிடி பட்டு சேர்ந்த ஆல் இலை - திருப்:340/3

கூண்கள் ஆம் என பொங்க நலம் பெறு காந்தள் மேனி மருங்கு துவண்டிட - திருப்:475/3

வேதத்தோனை காந்தள் கையால் தலை மேல் குட்டு ஆடி பாந்தள் சதா முடி - திருப்:498/9

காந்தள் கர வளை சேந்துற்றிட மத காண்டத்து அரிவையருடன் ஊசி - திருப்:933/1

காந்தளில் ஆன கர மான் தரு கான மயில் காந்த விசாக சரவண வேளே - திருப்:528/5

கூந்தலும் நீள் வளை கொள் காந்தளும் நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி - திருப்:527/2
காந்தள் அழித்த கை முகிழ் கூப்பி - உஞ்ஞை:34/239

கொழு மலர் காந்தள் குவி முகை அன்ன நின் - உஞ்ஞை:48/94

காந்தள் கொழு முகை கண்ட மகளிர் நம் - இலாவாண:12/68

கொய் பூம் காந்தள் கொண்ட கையினர் - இலாவாண:12/70

கால காந்தள் கதழ்வு இடம் காட்டி - இலாவாண:12/77

ஒண் பூம் காந்தள் வெண் பூம் சுள்ளி - இலாவாண:15/16

காம்பு அமை சிலம்பின் கடி நாள் காந்தள்
பூம் துடுப்பு அன்ன முன்கையின் பொலிந்து - இலாவாண:15/73,74

கரணம் பயிற்றினும் காந்தள் முகிழ் விரல் - இலாவாண:19/200

ஒண் பூம் காந்தள் உழக்கி சந்தனத்து - மகத:1/189

முகை நல காந்தள் முகிழ் விரல் நோவ - மகத:7/50

தேன் ஆர் காந்தள் திரு முகை அன்ன - மகத:22/90

காந்தள் நறு முகை கவற்று மெல் விரல் - வத்தவ:7/209

காந்தள் முகிழ் அன்ன மெல் விரல் காந்தள் - வத்தவ:11/78

காந்தள் முகிழ் அன்ன மெல் விரல் காந்தள்
பூம் துடுப்பு அன்ன புனை வளை முன்கை - வத்தவ:11/78,79

கயலே காந்தள் புயலே பொரு வில் - வத்தவ:12/149

காந்தள் முகிழ் நனி கவற்று மெல் விரலின் - வத்தவ:12/197

வால் வெள் வசம்பும் வள் இதழ் காந்தளும்
பால் வெண் கோட்டமும் பனிச்சையும் திலகமும் - உஞ்ஞை:50/28,29

கொய்து அகை போந்தும் கைதகை காந்தளும்
திமிசும் தேக்கும் ஞெமையும் ஆரமும் - இலாவாண:12/23,24

காந்தள் அம் போதில் பெய்து கைகளோடு ஒப்பு காண்பார் - பால:16 12/4

கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி - பால:16 23/1

தேன் உக மலர்ந்து சாய்ந்த சே இதழ் காந்தள் செம் பூ - கிட்:10 26/2

நல் நெடும் காந்தள் போதில் நறை விரி கடுக்கை மென் பூ - கிட்:10 30/1

என் கையே இழுக்கம் அன்றே இயம்பினும் காந்தள் என்றல் - கிட்:13 45/2

காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான் - சுந்:2 133/2

காந்தள் மெல் விரல் சனகி-மேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட - சுந்:2 208/3

காந்தள் மெல் விரல் சனகி-தன் கற்பு எனும் கடலை - சுந்-மிகை:12 6/1

வளைகள் காந்தளில் பெய்தன அனைய கைம் மயிலே - அயோ:10 29/1

ஏங்கிய குரலினர் இணைந்த காந்தளின்
தாங்கிய செம் கை தம் தலையின் மேல் உளார் - அயோ:4 191/3,4

காந்தளின் மலர் ஏறி பொலிவது கவின் ஆரும் - அயோ:9 5/2

காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை - அயோ:9 9/2

சிறுக்கின்ற வாள் முகமும் செம் காந்தள் கையால் - நள:194/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *