கால் வைத்தல்

சொல் பொருள்

கால் வைத்தல் – வருதல், குடிபுகுதல்

சொல் பொருள் விளக்கம்

கால் வைத்தல்; காலை நிலத்தில் அல்லது ஓரிடத்தில் வைத்தல் என்னும் பொருளில் விரிந்து ‘வருதல்’ என்னும் பொருளில் வருவது வழக்காகும். “என்றைக்காவது எங்கள் வீட்டில் நீங்கள் கால் வைத்ததுண்டா?” என்று வினாவினால் வந்ததுண்டா என்பது பொருளாம். கால் வைத்த நேரம் என்பது குடிபுகுந்த நேரம் என்பதையும் குறிக்கும். “அவள் கால் வைத்த நேரம் நல்ல நேரம். செல்வம் கொழிக்கிறது” “அவள் கால் வைத்த நேரம் இப்படித் தொட்டதெல்லாம் கரியாகிறது” என்பது போன்றவற்றில் கால் வைத்தல் என்பது குடிபுகுதல் என்னும் பொருளைக் காட்டுவது.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.