சொல் பொருள்
கிச்சு – கிச்சங்காட்டுதல்
முச்சு – மூச்சுத் தடுமாறச் செய்தல்.
சொல் பொருள் விளக்கம்
குழந்தைக்குக் கிச்சுமுச்சுக் காட்டாதே என்று எத்தனை முறை சொன்னாலும், சிறுவர்கள் விடுவது இல்லை. கிச்சு முச்சுக் காட்டுதலில் அவர்களுக்குக் கொள்ளை ஆர்வம்! குழந்தைக்குத் தன் துயரைச் சொல்லத் தெரியாதே.
கிச்சுக் காட்டுதல் என்பது உணர்வு மிக்க இடங்களில் தொட்டுச் சிரிப்பு உண்டாக்குதல். அச்சிரிப்பு மிகுதிப்படுதலால் மூச்சு முட்டிப் போதல் உண்டு. அது ‘முச்சு’ எனப்பட்டதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்