சொல் பொருள்
கிண்டல் – ஒருவன் மறைவுச் செய்தியை அவன் வாயில் இருந்தே பிடுங்குதல்; கிண்டி அறிதல் கிண்டல் ஆயிற்று.
கேலி – நகையாடுதல் கேலியாம்.
சொல் பொருள் விளக்கம்
கிண்டியறிந்து கொண்ட செய்தியைக் கொண்டு நகையாடுதல் கிண்டலும் கேலியுமாம். “என்னைப் பார்த்தால் உனக்குக் கிண்டலும் கேலியுமாக இருக்கிறது” என்று இயலாதார் தம்மை நொந்து கொள்ளுதல் கண்கூடு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்