சொல் பொருள்
கிண்டுதல் – கோழி காலால் நிலத்தைக் கிழித்தல்.
கிளறுதல் – கிண்டிய இடத்தில் கோழி அலகால் சீத்தல்.
சொல் பொருள் விளக்கம்
“கோழி கிண்டிக் கிளறித் தொலைக்கிறது” என்பது வழக்கு. கிண்டிக் கிளைத்தல் என்பதும் இதுவே. “குப்பையில் கிண்டி கிளைக்கும்” என்பது பழமொழி. ஒருவர் செய்தியைத் துருவித் துருவிக் கேட்கும் போது, ‘என்ன கிண்டிக் கிளறுகிறாயா?” என்று முறைப்பது வழக்கு. நெல்லைக் காலால் கிண்டுவதும், பின்னர்க் கையால் கிளறுவதும், கற்பித்த கல்வியாகலாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்